This Article is From Apr 21, 2020

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 18,601ஆக உயர்வு; 590பேர் உயிரிழப்பு!

Coronavirus Cases, India: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 1,336 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 18,601ஆக உயர்வு; 590பேர் உயிரிழப்பு!

Covid-19 Updates: கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 18,601ஆக உயர்வு

ஹைலைட்ஸ்

  • கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 18,601ஆக உயர்வு
  • நேற்று ஒரே நாளில் மட்டும் 47 பேர் உயிரிழப்பு
  • உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 590ஆக அதிகரித்துள்ளது
New Delhi:

இந்தியாவில் கொரோனா பாதிப்பிற்கு இதுவரை இல்லாத அளவு அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் மட்டும் 47 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 18,601ஆக உயர்ந்துள்ளது. மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 590ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 1,336 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

தொடர்ந்து, கடந்த வாரத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று காலை நிலவரப்படி, 17.48 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். அதாவது அதிகபட்சமாக ஒரே நாளில் 705 பேர் குணமடைந்துள்ளனர்.

இது நேற்றைய தினம், 14.75 ஆக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை 13.85 சதவீதமாக இருந்தது. சனிக்கிழமை 13.85 சதவீதமாக இருந்தது. வெள்ளிக்கிழமை 13.06 ஆக இருந்தது. வியாழக்கிழமை 12.02 சதவீதமாக இருந்தது. புதன்கிழமை 11.41 சதவீதமாக இருந்தது. செவ்வாய்கிழமை 9.99 சதவீதமாக இருந்தது. அந்த வகையில், நாடு முழுவதும் இதுவரை 3,200 பேர் வரை குணமடைந்துள்ளனர். 

டெல்லி ராஷ்டிரபதி பவன் வளாகத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்குள்ள 100க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அந்த நபருக்கு நான்கு நாட்கள் முன்னதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மற்றவர்களை சோதித்த போது அவர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. 

கொரோனா வைரஸ் பாதிப்புகளின் இரட்டிப்பு வீதம், என்பது தொற்று எவ்வளவு வேகமாக பரவுகிறது என்பதை தெரிய உதவுகிறது. அந்த வகையில், பாதிப்பு குறைந்துள்ளது என அரசு தெரிவித்துள்ளது. 

ஊரடங்கு உத்தரவுக்கு முன்பு இந்தியாவில் இரட்டிப்பு விகிதம் 3.4 நாட்களாக இருந்தது, தற்போது 7.5 நாட்களாக உயர்ந்துள்ளது என சுகாதார அமைச்சக மூத்த அதிகாரி லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். 

அந்த அடிப்படையில், மூன்று வாரங்கள் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு மே.3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு தகவல் தெரிவித்தது. 
 

.