This Article is From Mar 10, 2020

கொரோனா பாதிப்பு: ஈரானிலிருந்து 58 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்!

Coronavirus: இந்தியாவில் 47 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பு: ஈரானிலிருந்து 58 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்!

Coronavirus outbreak: இரானில் சிக்கிதவித்த இந்தியர்கள் முதற்கட்டமாக மீட்டு வரப்பட்டுள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • இரானில் சிக்கிதவித்த இந்தியர்கள் முதற்கட்டமாக மீட்டு வரப்பட்டுள்ளனர்.
  • ஐ.ஏ.எஃப். விமானம் மூலம் மீட்பு
  • இந்தியாவில் 47 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
New Delhi:

ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களில் முதற்கட்டமாக 58 பேர் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, ஈரான் சென்ற இந்திய விமானப்படை விமானம் மூலம் 58 பேரும் நாடு திரும்புகிறது. தெஹ்ரானில் இருந்து 58 இந்தியர்களுடன் விமானப்படை விமானம் புறப்பட்டது. ஈரானில் சிக்கியுள்ள மீதமுள்ள இந்தியர்களும் விரைவில் மீட்கப்படுவார்கள் எனவும் கூறியுள்ளார்.

மற்றொரு ட்வீட்டர் பதிவில், சிக்கியிருந்த இந்தியர்களை மீட்க உதவி செய்த தூதரக அதிகாரிகள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் முயற்சிகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார். 

சவாலான சூழ்நிலையிலும் செயல்படும் இரானில் உள்ள எங்கள் தூதரகம் மற்றும் இந்திய மருத்துவக் குழுவின் முயற்சிகளுக்கு நன்றி என்று அவர் கூறினார். மேலும், இந்திய விமானப்படைக்கும் நன்றி. ஈரான் அதிகாரிகளின் ஒத்துழைப்பும் பாராட்டுக்குரியது. ஈரானில் இன்னும் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாக பணியாற்றி வருகிறோம்” எனத்தெரிவித்துள்ளார்.

தமிழகத்திலிருந்து மீன்பிடித் தொழில் புரியச் சென்ற மீனவர்கள் மற்றும் மாணவர்கள் உள்படப் பல நூறு பேர் ஈரானில் உள்ளனர். கொரோனா பாதிப்புக்குள்ளான ஈரானில் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் இந்தியர்கள் சிக்கித் தவித்து வந்தனர். ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ளதை அடுத்து இந்தியர்களை மீட்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதன் அடிப்படையில் இந்திய விமானப்படையின் சி -17 ரக விமானம் ஒன்று மருத்துவக் குழுவுடன் உத்திரப்பிரசதேச மாநிலம் காசியாபாத்திலிருந்து நேற்று இரவு புறப்பட்டுச் சென்றது. அதிகாலை 2 மணி அளவில் அந்த விமானம் தெஹ்ரானை சென்றடைந்தது. பின்னர் அங்கிருக்கும் இந்தியர்களை மருத்துவ சோதனைக்குப் பிறகு அழைத்துக்கொண்டு அதிகாலை 4.30 மணி அளவில் இந்தியா புறப்பட்டது. விமானத்தில் வரும் அனைவரையும் உடனடியாக விடுவிக்காமல் சில நாட்களுக்குத் தொடர்ந்து மருத்துவமனையில் வைத்துக் கண்காணிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

.