This Article is From Jul 31, 2018

காங்கிரஸ் சமூக வலைத்தள ஊழியர் பாலியல் புகாரில் கைது

காங்கிரஸ் கட்சியின் சமூக வலைத்தளத்தை கையாளும் குழுவின் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்

காங்கிரஸ் சமூக வலைத்தள ஊழியர் பாலியல் புகாரில் கைது
New Delhi:

காங்கிரஸ் கட்சியின் சமூக வலைத்தளத்தை கையாளும் குழுவின் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். சிராக் பட்நாயக் என்ற அவர் முன்னாள் பெண் ஊழியர் ஒருவருக்கு பாலியல் தொல்லை தந்தாக அவர் மீது புகார் கூறப்பட்டது. கைது செய்து சில மணி நேரங்களில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

பட்நாயக் மீது ஜூலை - 3ம் தேதி வழக்கு பதியப்பட்டது. பாதிக்கபட்ட பெண், இந்த சம்பவம் நடந்ததில் இருந்து பணிக்கு செல்லவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

அந்த புகாரில் “சிராக் பட்நாயக் தன் அதிகாரத்தை முன் வைத்து அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார். அவர் மறுப்பு தெரிவித்த போதும் துன்புறுத்தலை தொடர்ந்திருக்கிறார்” என டெல்லி காவல் துறை எஃப்.ஐ.ஆர் கூறுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக காங்கிரஸின் சமூக வலைத்தளை தலைவர் திவ்யா ஸ்பந்தனா தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த மாதம், சிராக் பட்நாயக்கின் நன் நடத்தைக்கு சான்றாக ஊழியர்கள் அனைவரும் கையொப்பம் இட்ட கடிதம் ஒன்றை திவ்யா ஸ்பந்தனா வெளியிட்டிருந்தார். மேலும், செய்தியாளர் ஒருவர் தன்னிடம் கேட்கும் வரையில் அப்படி ஒரு சம்பவம் நடந்தது தனக்கு தெரியாது என்றும், பாதிகப்பட்டதாக கூறப்படும் பெண்ணிடம் இது குறித்து கேட்டுள்ளதாகவும், பதிலுக்காக காத்திருப்பதாகவும் கூறியிருந்தார்.

மறுபுறம் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று டெல்லி போலீஸிடம் பா.ஜ.க வலியுறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மீனாட்சி லெகி தெரிவித்துள்ளார்.

.