This Article is From Nov 24, 2018

ஹெலிகாப்டரில் சென்று விஞ்ஞான ரீதியாக ஆய்வு நடத்தியுள்ளார் முதல்வர்: மு.க.ஸ்டாலின்

திமுக எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்களின் ஒரு மாத சம்பளத்தையும் நிவாரணமாக வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்

ஹெலிகாப்டரில் சென்று விஞ்ஞான ரீதியாக ஆய்வு நடத்தியுள்ளார் முதல்வர்: மு.க.ஸ்டாலின்

ஹெலிகாப்டரில் சென்று விஞ்ஞான ரீதியாக அறிவுப்பூர்வமான முறையில் ஆய்வு நடத்தியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், டெல்டா மாவட்டங்களில் அரசின் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அதிருப்தி நிலவுகிறது. புயல் பாதித்த இடங்களில் முதலமைச்சர் முகாமிட்டு பணிகளை வேகப்படுத்தி இருக்க வேண்டும். 

ஆனால் ஹெலிகாப்டரில் சென்று விஞ்ஞான ரீதியாக அறிவுப்பூர்வமான முறையில் ஆய்வு செய்து விட்டேன் என முதல்வர் கூறுகிறார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனைவரையும் ஒருங்கிணைத்து நிவாரண பணிகளை முதல்வர் துரிதப்படுத்த வேண்டும். தமிழக அரசு கேட்டுள்ள நிவாரண நிதியை மத்திய அரசிடம் விரைந்து பெற வேண்டும்.

தி.மு.க ஏற்கனவே கஜா புயலுக்காக ரூ.1 கோடி நிதி அளித்துள்ளது. திமுக எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்களின் ஒரு மாத சம்பளத்தையும் நிவாரணமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் 4 கோடி மதிப்பில் 100 லாரிகளில் நிவாரண பொருட்கள் திமுக சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக உதவி செய்யும். ஹெலிகாப்டர் மூலம் பயணம் செய்ததை வைத்து தான் முதல்வர், நிவாரண நிதியை மத்திய அரசிடம் இருந்து விரைந்து பெற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

.