This Article is From Sep 22, 2018

திமுக-வின் ‘குடும்ப அரசியலை’ விமர்சித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

திமுக-வில் சாதாரண உறுப்பினர்கள் தலைமைப் பதவிக்கு வர முடியுமா? அங்கு குடும்ப அரசியல் இருப்பதால் அது சாத்தியமில்லை

திமுக-வின் ‘குடும்ப அரசியலை’ விமர்சித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

எடப்பாடி பழனிசாமி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக-வின் ‘குடும்ப அரசியலை’ கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து அவர், ‘கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் தான் திமுக-வில் மேல் நிலைக்கு வர முடியும். அதிமுக-வில் அப்படிப்பட்ட நிலை இருந்ததில்லை’ என்று கூறியுள்ளார். 

அவர் மேலும், ‘திமுக ஒரு குடும்ப அரசியல் கட்சி. முதலாவதாக கருணாநிதி, அந்தக் கட்சிக்குத் தலைவராக இருந்தார். இப்போது அவரது மகன் ஸ்டாலின் தலைவராக இருக்கிறார். இதையடுத்து, ஸ்டாலினின் மகன் உதயநிதி தலைவராக பொறுப்பேற்பார். அதன் பிறகு அவரது மகன் தலைவராவார்’ என்று திருநெல்வேலியில் நடந்த அதிமுக கட்சிக் கூட்டத்தில் பேசினார். 

அவர் தொடர்ந்து, ‘ஆனால் அதிமுக-வில் அப்படி இல்லை. யார் வேண்டுமானாலும் மேல்மட்டத்துக்கு வர முடியும். நான் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். ஆனால், இன்று முதல்வராக பொறுப்பேற்றுள்ளேன். இது அதிமுக-வில் தான் சாத்தியம்.

திமுக-வில் சாதாரண உறுப்பினர்கள் தலைமைப் பதவிக்கு வர முடியுமா? அங்கு குடும்ப அரசியல் இருப்பதால் அது சாத்தியமில்லை. கருணாநிதி, டெல்லிக்கு சென்றதெல்லாம் மக்களுக்காக போராட அல்ல. அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு பதவி வாங்கித் தர தான். கருணாநிதி போலத் தான் அவரது மகனும் இருப்பார்.

திமுக அரசு தான் ஊழல் புகார்களுக்காக இந்திய அளவில் கலைக்கப்பட்ட ஒரே அரசாங்கம். எனவே அதிமுக அரசு குறித்து அவர்கள் கூறி வரும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை’ என்று பேசினார். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.