This Article is From Aug 27, 2018

ஆசிய போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீரருக்கு ரூ.20 லட்சம் பரிசு - தமிழக அரசு

ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவில் நடைப்பெற்று வருகின்றன

ஆசிய போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீரருக்கு ரூ.20 லட்சம் பரிசு - தமிழக அரசு

ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவில் நடைப்பெற்று வருகின்றன. இதில், டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், தமிழகத்தைச் சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன் வெண்கலப் பதக்கம் வென்றார்

இந்நிலையில், வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரருக்கு, 20 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வெற்றிப் பெற்ற தமிழக வீரர் பிரஜ்னேஷுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து கடிதம் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அதில், ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்றதற்கு வாழ்த்துக்கள். தமிழக அரசு சார்பில் 20 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. மேலும், ஊக்கத்துடன் செயல்பட்டு பல வெற்றிகளை குவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 

.