This Article is From Jun 19, 2020

இந்திய நிலப்பரப்பை கைப்பற்ற சீன ராணுவம் மோதலை தூண்டக்கூடும்: அமெரிக்க செனட்டர்

“கடல் எல்லைகளை பொறுத்த அளவில் ஜப்பானை அச்சுறுத்த செங்காகு தீவுகளுக்கு சீன கடற்படை சென்றுள்ளது. தைவானிய வான்வெளியில் ஒரு சில நாட்களில் நான்கு முறை தனித்தனியாக சீன ஜெட் விமானங்கள் ஊடுருவியுள்ளன.“ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய நிலப்பரப்பை கைப்பற்ற சீன ராணுவம் மோதலை தூண்டக்கூடும்: அமெரிக்க செனட்டர்

“அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் நலனை அச்சுறுத்தும் நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது“:மெக்கானெல்

ஹைலைட்ஸ்

  • இரண்டு அணுசக்தி நாடுகளுக்கிடையேயான மேதால்களை உலகநாடுகள் கவனிக்கின்றது
  • இந்தியாவின் நிலப்பரப்பைக் கைப்பற்றுவதற்காக, பி.எல்.ஏ 1962முதல் முயல்கிறது
  • அமெரிக்காவின் செனட் பெரும்பான்மைத் தலைவர் மிட்ச் மெக்கானெல்
Washington:

இந்தியாவின் நிலங்களை அபகரிப்பதற்காக சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம்(PLA) இரு நாடுகளுக்கிடையே வன்முறை மோதலை தூண்டியுள்ளதாக அமெரிக்காவின் செனட் பெரும்பான்மைத் தலைவர் மிட்ச் மெக்கானெல் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கிடையே சமீபத்தில் நடைபெற்ற மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், அமெரிக்காவின் செனட் பெரும்பான்மைத் தலைவர் மிட்ச் மெக்கானெல், “இந்தியாவின் நிலப்பரப்பைக் கைப்பற்றுவதற்காக, பி.எல்.ஏ 1962 போரிலிருந்து முயன்று வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த மோதலை பி.எல்.ஏ முன்னெடுத்துள்ளது“ என கூறியுள்ளார். மேலும், “அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் நலனை அச்சுறுத்தும் நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது“ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“இரண்டு அணுசக்தி நாடுகளுக்கிடையேயான இந்த மேதால்களை உலக நாடுகள் கவனித்து வருகிறது. நாங்கள் அமைதியை எதிர்பார்க்கின்றோம். சீனா தங்களது சொந்த மக்களை அதன் நாட்டு எல்லைக்குள் கொடுமைப்படுத்தி வருகிறது. இதான் உயிரிழந்தவர்கள் குறித்த தகவல்களை பெற முயன்றோம் ஆனால், முடியவில்லை“ என்றும் மெக்கானெல் குறிப்பிட்டுள்ளார். மேலும், “சீன கம்யூனிஸ்ட் கட்சி ஹாங்காங் மீதான ஒடுக்குமுறையை அதிகரிக்க தொற்றுநோயை காரணமாக கொண்டு செயல்படுகிறது.“ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“கடல் எல்லைகளை பொறுத்த அளவில் ஜப்பானை அச்சுறுத்த செங்காகு தீவுகளுக்கு சீன கடற்படை சென்றுள்ளது. தைவானிய வான்வெளியில் ஒரு சில நாட்களில் நான்கு முறை தனித்தனியாக சீன ஜெட் விமானங்கள் ஊடுருவியுள்ளன.“ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அமெரிக்காவில் கறுப்பினத்தவர் ஒருவர் காவல்துறையின் பொறுப்பில் இருந்த போது உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்நாட்டில் கலவரங்கள் வெடித்துள்ளன. சொந்த நாட்டு மக்களை அரசு இரண்டாம் தர குடிமக்களாக பிரித்து பார்க்கின்றது என்கிற பதாகைகளுடன் அமெரிக்காவில் தொடர் போராட்டங்கள் முன்னெழுந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

.