This Article is From Mar 14, 2019

மசூத் அசார் விவகாரத்தில் சீனா முட்டுக்கட்டை... அமெரிக்கா கடும் எச்சரிக்கை!

மசூத் அசாருக்கு எதிராக பல நாடுகள் ஐ.நா சபையில் போர்க் கொடி தூக்கியுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

மசூத் அசார் விவகாரத்தில் சீனா முட்டுக்கட்டை... அமெரிக்கா கடும் எச்சரிக்கை!

மசூத் அசார், சர்வதேச தீவிரவாதியாக பட்டியலிடப்படும் பட்சத்தில், அவரின் சொத்துகள் முடக்கப்படும்.

New Delhi:

ஐ.நா சபை மூலம், பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை, சர்வதேச தீவிரவாதியாக பட்டியலிட முயற்சி எடுக்கப்பட்டது. இந்த முயற்சிக்கு சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சீனா, இப்படி தலையிடுவது நான்காவது முறையாகும். இதனால் கோபமடைந்த அமெரிக்கா, ‘சீனா இப்படி நடந்து கொண்டால், வேறு வழிகளை கையாள வேண்டியிருக்கும். சீனா, பாகிஸ்தானில் இருக்கும் அல்லது வேறு நாடுகளில் இருக்கும் தீவிரவாதிகளை காப்பாற்ற பார்க்கக் கூடாது' என்று கறாரான கருத்தைப் பதிவு செய்துள்ளது. 

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள், மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக பட்டியலிட நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து அந்நாடுகள் அனுப்பியுள்ள கடிதம் NDTV-க்கு கிடைத்துள்ளது. அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் சீனா எந்தவித முடிவும் எடுக்கவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

5sn2u6v8

 

இதையடுத்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இருக்கும் அமெரிக்க அதிகாரி, ‘இப்படி சீனா செய்வது நான்காவது முறையாகும். பாதுகாப்பு கவுன்சில் செய்ய வேண்டிய பணிகளை தடுக்கும் வகையில் சீனா நடந்து கொள்ளக் கூடாது. தொடர்ந்து சீனா இதைப் போன்ற நடவடிக்கையில் இறங்குமானால், பாதுகாப்பு கவுன்சிலில் இருக்கும் நாடுகள் வேறு வழிகளை கையாள வேண்டியிருக்கும். அதற்கு அவசியம் இருக்காது என நம்புகிறேன்' என்று எச்சரிக்கும் தொனியில் கூறியுள்ளார். 

சீனாவின் இந்த நடவடிக்கைக்கு இந்திய தரப்பு, கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் மற்ற நாடுகளின் முயற்சிகளை பாராட்டியுள்ளது இந்தியா. 

மசூத் அசாருக்கு எதிராக பல நாடுகள் ஐ.நா சபையில் போர்க் கொடி தூக்கியுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. மசூத் அசார், சர்வதேச தீவிரவாதியாக பட்டியலிடப்படும் பட்சத்தில், அவரின் சொத்துகள் முடக்கப்படும். மேலும், ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குப் பயணம் செய்யவும் அவருக்குத் தடை விதிக்கப்படும். 

மசூத் அசாருக்கு எதிராக, ஐ.நா சபையில் இப்போது கொண்டு வரப்பட்டது போல் ஓர் தீர்மானம், 2016 ஏப்ரல் மாதமும் கொண்டுவரப்பட்டது. அப்போதும் சீனா, அந்த நடவடிக்கைக்கு முட்டுக்கட்டைப் போட்டது. 


 

.