This Article is From Jun 17, 2020

முதல்வர் எடப்பாடியின் பழனிசாமியின் அலுவலக தனிச்செயலாளர் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு!

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அலுவலக தனிச்செயலாளர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முதல்வர் எடப்பாடியின் பழனிசாமியின் அலுவலக தனிச்செயலாளர் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு!

முதல்வர் எடப்பாடியின் பழனிசாமியின் அலுவலக தனிச்செயலாளர் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல்வர் எடப்பாடியின் பழனிசாமியின் அலுவலக தனிச்செயலாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து 18 நாட்களாக ஆயிரத்தினை கடந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி 1,515 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 19 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களாக சென்னையில் நாள்தோறும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் சென்னையில் நேற்றைய தினம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 919 ஆக குறைந்துள்ளது.  சென்னையில் மொத்தம் 34 ஆயிரத்து 245 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியளவில், கொரோனா பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 48,019 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 528 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 26,782 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வந்தாலும், கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துதான் வருகிறது.

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனிச்செயலாளர் தாமோதரன் உயிரிழந்துள்ளார்.

சென்னையில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அலுவலக தனிச்செயலாளர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

.