This Article is From Jul 03, 2018

9 நாட்கள் குகைக்குள் சிக்கித் தவித்த தாய்லாந்து சிறுவர்கள் கண்டுபிடிப்பு!

தாய்லாந்து நாட்டில் 9 நாட்கள் குகைக்குள் சிக்கித் தவித்த 12 சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்

9 நாட்கள் குகைக்குள் சிக்கித் தவித்த தாய்லாந்து சிறுவர்கள் கண்டுபிடிப்பு!

ஹைலைட்ஸ்

  • ஜூன் 23 ஆம் தேதி குகைக்குள் சிக்கினர் கால்பந்து குழு
  • தாய்லாந்தில் தம் லுவாங் பகுதியில் சிறுவர்கள் மாட்டிக் கொண்டனர்
  • சிறுவர்களை பத்திரமாக மீட்டுக் கொண்டு வருவது சவாலான பணி எனத் தகவல்
Mae Sai, Thailand:

தாய்லாந்து நாட்டில் 9 நாட்கள் குகைக்குள் சிக்கித் தவித்த 12 சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி சிறுவர்கள் நிறைந்த ஒரு கால்பந்து அணி, தங்களது பயிற்சியாளருடன் தாய்லாந்தில் இருக்கும் சியாங் ராய் பகுதியில் உள்ள தம் லுவாங் குகைக்குச் சென்றுள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக குகைக்குள் அவர்கள் அனைவரும் மாட்டிக் கொண்டுள்ளனர். தாய்லாந்தில் ஜூலை மாதங்களில் அடை மழை பெய்யும். இந்த நேரத்தில் தம் லுவாங் குகைக்குள் செல்வது பாதுகாப்பனதல்ல என்று கூறப்படுகிறது. ஆனால், கால்பந்து குழுவினர் சரியாக இந்த நேரத்தில் சென்றது தான் அவர்கள் உள்ளேயே மாட்டிக் கொண்டதற்குக் காரணமாக இருந்துள்ளது. சிறுவர்கள் அனைவரும் பதின் பருவத்தினர்.

tham luang chiang rai thailand cave rescue afp

class="ins_instory_dv_caption">இந்த விவகாரம் தாய்லாந்தில் மட்டுமல்ல உலக அளவில் கவனம் பெற்றது. சம்பவம் குறித்து வெளியே தெரிய ஆரம்பித்த உடன், உலகின் பல்வேறு மூலைகளிலிருந்து குகையில் சிக்கி இருப்பவர்களை மீட்பதற்கு இருக்கும் நபர்கள் சிறுவர்களைத் தேட ஆரம்பித்துள்ளது. பல நாட்டு அரசுகளும் சிறுவர்களை மீட்க நிபுணர்களை அனுப்பி வைத்தது.

tham luang chiang rai thailand cave rescue afp

இதில் சிலர், சிறுவர்களை கண்டுபிடிக்கவே பல வாரங்கள் ஆகும் என்றெல்லாம் ஆருடம் கூறினர். இந்நிலையில், தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த இங்கிலாந்து நாட்டினர் நேற்று சிறுவர்கள் இருக்கும் குகையை கண்டுபிடித்தனர். அவர்களில் ஒருவர் சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

tham luang chiang rai thailand cave rescue afp

வீடியோ எடுப்பவர், ‘எத்தனை பேர் இருக்கிறீர்கள்?’ என்று கேட்க, சிறுவர்கள் தங்களுக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் ’13 பேரும் இருக்கிறோம்’ என்றனர்.

tham luang chiang rai thailand cave rescue afp

‘எங்களுக்குப் பின்னாலேயே நிறைய பேர் வந்து கொண்டிருக்கின்றனர். கவலைபடாதீர்கள்’ என்கின்றனர். அதைத் தொடர்ந்து சிறுவர்கள், ‘மிகவும் பசிக்கிறது’ என்று கதறுகின்றனர். ‘எங்களுக்குப் புரிகிறது. நீங்கள் 10 நாட்களாக இங்கு இருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் நல்ல உடல் வலுவுடன் இருக்கிறீர்கள்’ என்கிறார்.

இந்த வீடியோ தாய்லாந்து நாட்டின் சீல் படையினரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதியப்பட்டுள்ளது. வீடியோவில் சிறுவர்கள் கால்பந்து வீரர்கள் அணிவது போன்ற உடைகளை அணிந்திருந்தனர். எல்லோரும் மிகவும் ஒல்லியாகவும் சோர்வாகவும் காணப்பட்டனர். சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவர்கள் அனைவரையும் குகைக்கு வெளியே கொண்டு வருவது சவாலான விஷயம் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.

.