This Article is From Aug 23, 2018

வெள்ள முகாம்களில் தேவைப்படும் மொபைல் டாய்லெட்ஸ்! உதவிக்கரம் நீட்டிய சென்னை குழு

ஆரோக்கியமான நிவாரண பணிக்களுக்காகவும், தொற்று நோய் பரவாமல் தடுக்கவும் கேரளாவில் உள்ள முகாம்களுக்கு மொபைல் டாய்லெட்டுகள் தேவைப்படுகின்றன

வெள்ள முகாம்களில் தேவைப்படும் மொபைல் டாய்லெட்ஸ்! உதவிக்கரம் நீட்டிய சென்னை குழு

கேரள மாநிலத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 8 ஆம் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. மழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகளை திரும்ப கொண்டு வரும் வேலைகளும், மீட்புப் பணிகளும் ஒரே நேரத்தில் நடந்து வருகின்றன.

இதனை அடுத்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மாநிலம் முழுவதும் 3,700 மருத்துவ முகாம்களை அமைத்துள்ளது. மேலும், 6 சிறப்பு மருத்துவக் குழுக்களையும் தயார் நிலையில் வைத்துள்ளது.

தொடர்ந்து தீவிரமாக மீட்பு பணிகள் நடைப்பெற்று வரும் நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிவாரணப் பொருட்கள் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பொருட்களான உணவு, உடை, நாப்கின்ஸ், இதர உதவி பொருட்கள் கேரளாவில் குவிந்து வருகின்றன.

எனினும், மிக முக்கியமாக தேவைப்படுவது சுகாதார பணிகளுக்கான பொருட்கள். சென்னையைச் சேர்ந்த ‘தி நியூ ஃபேஸ் ஆப் சொஸைட்டி’ என்ற தன்னார்வ குழு, கேரள வெள்ள முகாம்களில் மொபைல் டாய்லெட்டுகளை நிறுவ உதவி செய்துள்ளனர்.

வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இடுக்கி, செங்கனூர் பகுதிகளில் உள்ள முகாம்களுக்கு 7 மொபைல் டாய்லெட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கி இருக்கும் இடத்தில், உணவுகளை சாப்பிட வழங்கும் முன் சுத்தமான இருப்பிடமாக மாற்றி அமைக்க வேண்டும். வெள்ள நீர் வடியத் தொடங்கியுள்ளதால், தொற்று நோய் பரவுவதற்கான வாய்புகள் அதிகம் உள்ளன. பெண்களும், குழந்தைகளும் அதிக அளவில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதனால், கழிவறை வசதியின்மை மிக முக்கியமான பிரச்சனையாக உள்ளது.

“பல நூறு மக்கள் தங்கி இருக்கும் முகாம்களில், மொபைல் டாய்லெட்டுகள் வைப்பது அவசியம். வெள்ள பாதிப்புகளில் இருந்து மீட்பு பணிகள் நடைப்பெற்று வரும் போது, தொற்று நோய், உடல் பாதிப்புகள் ஏற்படுதை முதலில் தடுக்க வேண்டும்” என்று இந்த குழுவில் செயல்பட்டு வரும் திவ்யா தெரிவித்தார்.

ஒரு மொபைல் டாய்லெட்டை நிறுவ, 30-000 ரூபாய் முதல் 40,000 ஆயிரம் ரூபாய் செலவாகும். எனினும், இயற்கை பேரிடர் என்பதால், மொபைல் டாய்லெட் தயாரிப்பாளர்களிடம் குறைந்த விலைக்கு ஆர்டர் எடுக்க முயற்சித்து வருவதாக திவ்யா தெரிவித்தார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ‘தி நியூ ஃபேஸ் ஆப் சொஸைட்டி’ என்ற தன்னார்வ குழுவை சென்னையைச் சேர்ந்த தீபா இராஜகோபால், திவ்யா மருந்தையா, அனந்த் வைத்தியநாதன், திலீப் ஶ்ரீனிவாசன், அஷ்வின் சேத்துராமன், ராஜேஷ் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரால் தொடங்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட சென்னை வெள்ளம், அதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போராட்டம், வரதா புயல் பாதிப்பு போன்ற சமயங்களில் இந்த குழு சிறப்பாக இயங்கியது.

சமூக வலைத்தளம் மூலம் தன்னார்வ பணிகளில் தீவிரமாக இயங்கி வரும் இந்த அமைப்பின் பேஸ்புக் குழுவில் 60,000க்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர். உடனடி தேவைகளை, முக்கிய உதவிகளை கனெக்ட் செய்யும் இந்த அமைப்பினர், கேரள வெள்ள நிவாரணத்திற்கு இரவு பகலாக உழைத்து வருகின்றனர்.

ஆரோக்கியமான நிவாரண பணிக்களுக்காகவும், தொற்று நோய் பரவாமல் தடுக்கவும் கேரளாவில் உள்ள முகாம்களுக்கு மொபைல் டாய்லெட்டுகள் தேவைப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு : https://www.facebook.com/groups/TheNewFaceOfSociety/ 

7558145788, 9241228463 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

.