This Article is From Aug 28, 2020

விமானங்களில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை: மத்திய அரசு உத்தரவு!

உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் ஒருமுறை பயன்படுத்தப்படும் தட்டுகள் உள்ளிட்டவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விமானங்களில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை: மத்திய அரசு உத்தரவு!

விமானங்களில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை: மத்திய அரசு உத்தரவு! (Representational)

New Delhi:

உள்நாட்டு விமானங்களில் முன்பே பேக் செய்யப்பட்ட தின்பண்டங்கள், உணவு மற்றும் பானங்கள் மற்றும் சர்வதேச விமானங்களில் சூடான உணவை வழங்க விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

மேலும், முகக்கவசம் அணியாதவர்களை விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டோர் பட்டியலில் சேர்க்க மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

அதேபோல், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உள்நாட்டு விமானங்களில் உணவு வழங்குவதற்கு மே.25ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதேபோல், சர்வதேச விமானத்தில், பயண நேரத்தை பொருத்து முன்பே பேக் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் திண்பண்டங்களை மட்டும் வழங்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், விமான போக்குவரத்து அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், உள்நாட்டு விமானங்களில் முன்பே பேக் செய்யப்பட்ட உணவுகள், திண்பண்டங்களை வழங்கவும், சர்வதேச விமானங்களில் சூடான உணவுகள், குளிர்பானங்கள் வழங்கவும் அனுமதி அளித்துள்ளது. 

மேலும், உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் ஒருமுறை பயன்படுத்தப்படும் தட்டுகள் உள்ளிட்டவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு முறை உணவு அல்லது குளிர்பானங்களை வழங்கும்போதும் விமான பணியாளர்கள் புதிதாக கையுறை அணிய வேண்டும். 

உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கிடைக்க கூடிய பொழுதுபோக்கு அம்சங்களையும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.