கார் பார்க்கிங், ஷாப்பிங் மாலில் சுற்றித்திரிந்த சிறுத்தையால் பதற்றம்

சிறுத்தை எங்கிருந்து வந்தது, எங்கு சென்றது என்பது குறித்த விவரங்கள் தெரியவரவில்லை.

கார் பார்க்கிங்கில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவான சிறுத்தைப் புலியின் நடமாட்டம்.

Thane:

மகாராஷ்டிராவில் ஷாப்பிங் மால் மற்றும் கார் பார்க்கிங் பகுதியில் சிறுத்தை ஒன்று நடமாடியிருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தானே மாவட்டம் சமதா நகர் பகுதியில் ஓட்டல் ஒன்றின் சிசிடிவி கேமராவில் சிறுத்தை நடமாடும் காட்சிகள் பதிவாகி இருக்கின்றன. சமதா நகரில் உள்ள கோரம் ஷாப்பிங் மாலில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

இதுதொடர்பாக தானே பகுதியின் பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்பின்னர் சமதா நகருக்கு வந்த வனத்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் சுமார் 2 மணி நேரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

Newsbeep

இருப்பினும் சிறுத்தை சிக்கவில்லை. அது எங்கிருந்து வந்தது, எங்கு சென்றது என்ற விவரம் கிடைக்கவில்லை. மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் சிறுத்தைப் புலி வந்து சென்றிருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.