ஒரு பூனை பைக்கில் சவாரி செய்வதைக் காணலாம்
பூனை இருசக்கர வாகனத்தில் சொகுசாக பயணம் செய்யும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. விப் என்ற பெயரில் உள்ள மைக்ரோ பிளாக்கிங் இணையதளத்தில் பகிரப்பட்ட புகைப்படங்கள் ட்விட்டரில் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படம் இணையத்தில் லைக் மற்றும் கமெண்டுகளையும் குவித்து வருகிறது. இருசக்கர வாகனத்தில் பூனை பெரிய அளவு வெள்ளரிக்காய் போன்று கிடந்து செல்கிறது. அதே நேரத்தில் இளைஞன் ஒருவர் இருசக்கர வாகனத்தை ஓட்டியும் செல்கிறார்.
புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்து தெரியவில்லை. படத்தின் பிண்ணனியில் மும்பை பெருநகர பிராந்திய மேம்பாடு ஆணையத்தின் சின்னமும், வண்டியின் எண்ணும் அது மும்பை என்று வெளிப்படுத்துகிறது.
கீழே உள்ள புகைப்படங்கள்தான் வைரலாகியுள்ளது.
ஆன்லைனில் பகிரப்பட்டதிலிருந்து 2,500க்கும் மேற்பட்ட ‘லைக்குகள்' மற்றும் கமெண்டுகள் கிடைத்துள்ளன.
சில ட்விட்டர் பயனர்கள் இருசக்கர வாகனம் ஓட்டும் இளைஞனும் பூனையும் ஏன் ஹெல்மெட் அணியவில்லை கேலியாக குறிப்பிட்டு வருகின்றனர்.
சில வாரங்களுக்கு முன்பு டெல்லியில் ஒரு நாய் இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையில் தலைக்கவசம் அணிந்து பயணித்தது. அந்த புகைப்படம் வெகுவாக வைரலாக பரவியது.
Click for more
trending news