பிரதமர் மோடிக்கு எதிராக சர்ச்சை கருத்து! - கண்ணையா குமார் மீது வழக்கு!

திங்களன்று, கிஷன்காஞ்சில் உள்ள அஞ்சுமான் இஸ்லாமிய ஹாலில் நடைபெற்ற கூட்டத்தில் வன்முறையை தூண்டும் கருத்துகளை கூறியதாக கூறப்படுகிறது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
பிரதமர் மோடிக்கு எதிராக சர்ச்சை கருத்து! - கண்ணையா குமார் மீது வழக்கு!

சிபிஐ சார்பில் மக்களவைத் தேர்தலில் முதன்முறையாக கண்ணையாகுமார் போட்டியிட தயாராகி வருகிறார்.


Kishanganj: 

பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக பேசியதாக, ஜேஎன்யூ முன்னாள் மாணவ சங்க தலைவர் கண்ணையா குமார் மீது பீகார் கிசான்கஞ் நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பீகாரின் கிஷன்கஞ்ச் பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் பாஜக சிறுபான்மையினர் பிரிவு மாநில துணைத்தலைவர் தித்து பட்வால் நேற்று இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக அவரது மனுவில், கடந்த திங்கள் அன்று அஞ்சுமன் இஸ்லாமியா ஹாலில், நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கண்ணையா குமார் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்துகளை அவர் பேசியதாக அதில் கூறப்பட்டுள்ளது.

ஜேஎன்யூ முன்னாள் மாணவ சங்க தலைவர் கண்ணையா குமார், பெகுசராய் மக்களவை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................