This Article is From Mar 28, 2019

10% இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

டந்த மார்ச் 11ம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், இந்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது எனக் கூறி, வழக்கின் விசாரணையை மார்ச் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

10% இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

வழக்கு விசாரணை ஏப்.8 ம் தேதிக்கு ஒத்திவைப்பு

பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு எதிரான வழக்கு ஏப்.8 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதியினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்தது. இந்தக் கோரிக்கை சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது.

இட ஒதுக்கீடுகள் 50 சதவிகிதத்திற்கு மிகக் கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி, அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, சில எதிர்கட்சிகளின் துணையுடன் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் 10% இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த புதிய சட்டதிருத்தத்தின் படி ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வரை வருமானம் உள்ளோர் இந்த சலுகையை பெற தகுதியானவர்கள். 5 ஏக்கருக்கு அதிகமான விவசாய நிலம் வைத்திருப்போர், ஆயிரம் சதுர அடிக்கு அதிகமான வீட்டில் குடியிருப்போர், நகராட்சி பகுதியில் 100 அடிக்கு அதிகமான இடத்திலும், நகராட்சி இல்லாத இடத்தில் 200 அடிக்கு அதிகமான இடத்திலும் குடியிருப்போர் இந்த சலுகையை பெற இயலாது என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இச்சட்டத்துக்கு தடைவிதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கை கடந்த மார்ச் 11ம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், இந்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது எனக் கூறி, வழக்கின் விசாரணையை மார்ச் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

அதன்படி, இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக அரசியல் சாசன அமர்வு விசாரிப்பது குறித்து நீதிமன்றம் பரிசீலனை செய்து வருவதாக கூறி மேலும் விசாரணையை ஏப்ரல் 8ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

.