This Article is From Jul 08, 2020

ஏழை எளிய மக்களுக்கு நவம்பர் வரையில் இலவச உணவுப்பொருள்! மத்திய அமைச்சரவை ஒப்புதல்

முன்னதாக 7.4 கோடி ஏழை பெண்களுக்கு செப்டம்ப மாதம் வரையில் இலவச சிலிண்டரை வழங்குவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. முன்னதாக இந்த திட்டம் ஏப்ரல்  முதல் ஜூன் வரையில்  இருந்தது.  தற்போது திட்டம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 

ஏழை எளிய மக்களுக்கு நவம்பர் வரையில் இலவச உணவுப்பொருள்! மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அரசுக்கு ரூ. 1.49 லட்சம் வரையில் இழப்பு ஏற்படும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

New Delhi:

ஏழை எளிய மக்களுக்கு நவம்பர் வரையில் இலவச உணவுப்பொருள் வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏழை எளிய மக்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் மத்திய அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளது. 

இந்த அமைச்சரவை கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை வகித்தார். மத்திய அரசின் அறிவிப்பால் நாடு முழுவதும் 81 கோடி ஏழை மக்கள் 5 மாதங்களுக்கு தலா 5 கிலோ உணவுப் பொருளை இலவசமாக பெறுவார்கள். 

இதனால் மத்திய அரசுக்கு ரூ. 1.49 லட்சம் வரையில் இழப்பு ஏற்படும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக 7.4 கோடி ஏழை பெண்களுக்கு செப்டம்ப மாதம் வரையில் இலவச சிலிண்டரை வழங்குவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. முன்னதாக இந்த திட்டம் ஏப்ரல்  முதல் ஜூன் வரையில்  இருந்தது.  தற்போது திட்டம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 

இதேபோன்று இ.பி.எஃப். பணத்தில்  பணியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் அளிக்க வேண்டிய மொத்தம் 24 சதவீத பங்களிப்பை மத்திய அரசு வழங்கும் என அறிவிக்கப்பட்டது.  இந்த வகையில் அரசுக்கு ரூ. 4,860 கோடி வரையில் இழப்பு  ஏற்படும். 

.