'குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பாளர்களுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்' - காங்கிரஸ்

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்கள் அரசியல்வாதிகளின் கைகளை விட்டு சென்று விட்டதாகவும், தற்போது அது உணர்ச்சிப்பூர்வமான போராட்டமாக மாறியுள்ளது என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது.

'குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பாளர்களுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்' - காங்கிரஸ்

போராட்டம் நடத்துபவர்களுடன் அமித் ஷாவும், பிரதமர் மோடியும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று திக் விஜய் சிங் கூறியுள்ளார்.

Sehore:

குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பாளர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. 

இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய் சிங் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது - 

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் வலுத்து வருகிறது. தற்போது குடியுரிமை சட்ட திருத்தம், என்.பி.ஆர்., என்.சி.ஆருக்கு எதிரான போராட்டங்கள் அரசியல்வாதிகளின் கைகளில் இருந்து சென்று விட்டது. தற்போது இந்த போராட்டங்கள் உணர்ச்சிப் பூர்வமான போராட்டங்களாக மாறியுள்ளது. 

தேசிய மக்கள் தொகை பதிவேடான என்.பி.ஆர்., தேசிய குடிமக்கள் பதிவேடான என்.சி.ஆர்., அதனைத் தொடர்ந்து குடியுரிமை சட்ட திருத்தம் ஆகியவை நிறைவேற்றப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். 

இப்போது இந்த பிரச்னைகளை ஒழுங்கான முறையில் கையாள வேண்டும் என்று நினைத்தால், பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் போராட்டம் நடத்திக் கொண்டிருப்பவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். 

போராட்டக்காரர்கள் கொண்டுள்ள சந்தேகங்களுக்கு இந்த இருவரும் விளக்கம் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் நிலைமை இன்னும் இந்த நாட்டில் மோசம் அடையக் கூடும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

முன்னதாக டெல்லியில் ஷாஹீன் பாக்கில் நடைபெற்று வரும் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த அமித் ஷா, போராட்டக்காரர்கள் மீதுள்ள கோபத்தை மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்காளர்கள் காட்ட வேண்டும் என்று பேசியிருந்தார். இதன் மூலம் மறைமுகமாக பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் அமித் ஷா.

இதுகுறித்து கருத்து தெரிவித்த திக் விஜய் சிங், பாஜக தலைவர்கள் நாட்டில் பிரச்னையை கிளப்பும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதைத் தவிர்த்து வேறு ஒன்றையும் அவர்கள் செய்வது இல்லை என்று கூறினார். 
 

Listen to the latest songs, only on JioSaavn.com