This Article is From Feb 01, 2020

'வேளாண் பொருட்களை கொண்டுசெல்ல ஏசி வசதியுடன் விவசாய ரயில்' - பட்ஜெட்டில் அறிவிப்பு!!

2009 - 10 பட்ஜெட்டின்போது அப்போதைய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி விவசாய பொருட்களுக்கான ரயில் திட்டத்தை அறிவித்தார். ஆனால் அந்த திட்டம் நடைமுறைப்படுத்துவதில் தோல்வி அடைந்தது.

'வேளாண் பொருட்களை கொண்டுசெல்ல ஏசி வசதியுடன் விவசாய ரயில்' - பட்ஜெட்டில் அறிவிப்பு!!

நீண்ட தூரத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் ரயில் முழுவதும் ஏ.சி. வசதி செய்யப்பட்டிருக்கும்.

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் நிகழ்வாக விவசாய உற்பத்தி பொருட்களை கொண்டு செல்வதற்கு தனி ரயில் ஏற்படுத்தப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார். 

கிசான் ரயில் என அழைக்கப்படும் இந்த திட்டம் அரசு - தனியார் - கூட்டு முயற்சி என்ற (PPP) திட்டத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்படும். 

'அரசு - தனியார் - கூட்டு முயற்சி திட்டத்தின் அடிப்படையில் கிசான் (விவசாய) ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். இதனால் விரைவில் அழுகக் கூடிய விவசாய பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாக கொண்டு செல்ல முடியும்.

இதேபோன்று குறிப்பிட்ட சில பயணிகள் ரயிலில் குளிரூட்டப்பட்ட பெட்டிகள் விவசாய பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும். ' என்று பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 

மத்திய அரசு கொண்டு வரவுள்ள இந்த திட்டத்தின் மூலம், பழங்கள், பால் பொருட்கள், மீன், இறைச்சி போன்றவற்றை குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் வைக்கப்பட்டு நீண்ட தூரத்திற்கு கொண்டு செல்ல முடியும். 

2009 - 10 பட்ஜெட்டின்போது அப்போதைய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி விவசாய பொருட்களுக்கான ரயில் திட்டத்தை அறிவித்தார். ஆனால் அந்த திட்டம் நடைமுறைப்படுத்துவதில் தோல்வி அடைந்தது. 
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.