This Article is From Aug 25, 2018

9 வயது கத்துக்குட்டி சீடனை அடித்துக் கொன்ற பௌத்த துறவி: தாய்லாந்தில் அராஜகம்

தாய்லாந்தில் ஒன்பது வயது சிறுவனை அவனது குருவான பௌத்த துறவி மூங்கில் கழியால் இடைவிடாமல் அடித்தும் தூணில் அவன் தலையை மோதியும் கொன்றுள்ளார்.

9 வயது கத்துக்குட்டி சீடனை அடித்துக் கொன்ற பௌத்த துறவி: தாய்லாந்தில் அராஜகம்

சிறுவனைத் தாக்கியதாக வழக்குப் பதிவுசெய்யப்பட்டு கைதானதை அடுத்து அத்துறவி தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

Bangkok, Thailand:

தாய்லாந்தில் ஒன்பது வயது சிறுவனை அவனது குருவான பௌத்த துறவி மூங்கில் கழியால் இடைவிடாமல் அடித்தும் தூணில் அவன் தலையை மோதியும் கொன்றுள்ளார்.

சுப்பசாய் சூத்தியானோ (64) என்னும் துறவி தனது ஒன்பது வயது சீடன் வழிபாட்டு நேரத்தில் விளையாட்டுத் தனமாக நடந்துகொண்டு தொந்தரவு செய்ததால் ஆத்திரம் அடைந்துள்ளார். இதையடுத்து வட்டனபோல் சிசாவட் என்னும் அச்சிறுவனை மூங்கில் கழியால் முதுகில் பலமுறை அடித்துள்ளார். இதன்பின்னர் அங்கிருந்த தூண் ஒன்றில் அவனது தலையைக் கொண்டு வேகமாக முட்டியுள்ளார். தலைநகர் பாங்காங்குக்கு மேற்கே உள்ள காஞ்சன்புரியில் உள்ள விகாரையில் இச்சம்பவம் நடந்துள்ளது. படுகாயமடைந்த சிறுவன் கோமா நிலைக்குச் சென்று வியாழன் இரவு உயிரிழந்துவிட்டான்.

புத்த பெரும்பான்மை தேசமான தாய்லாந்தில் ஏற்கனவே பௌத்த துறவிகளின் மீது பாலியல், பணம்பறித்தல், போதைமருந்து பயன்பாடு தொடர்பான புகார்கள் பெருகி வரும் நிலையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

சிறுவனைத் தாக்கியதாக வழக்குப் பதிவுசெய்யப்பட்டு கைதானதை அடுத்து அத்துறவி தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

“மரணம் விளைவிக்கும்படி தாக்குதல்” என்பதாக அவர்மீதான வழக்கு மாற்றியமைக்கப்படும் என போலிஸ் கேப்டன் அம்னஜ் சுன்புல்ட் தெரிவித்தார்.

உயிரிழந்த சிறுவனின் தாயார் சுகுன்யா டுன்ஹிம் தாய்லாந்து செய்தியாளர்களிடம் தன் மகனைக் கொன்ற துறவியை மன்னிக்கப்போவதில்லை என்று கூறியிருக்கிறார்.

தாய்லாந்தில் பௌத்த மதம் தினசரி வாழ்வின் இடையறாத ஓர் அங்கமாகும். இதனால் குழதைகள் பெரியவர் என அனைவரும் சில காலம் பௌத்த மடங்களில் தங்கிப் பயிற்சி பெறுவது அங்கு வழக்கமாக உள்ளது.

தாய்லாந்து கிராமங்களில் துறவிகளின் பேச்சை யாரும் மீறிட முடியாது என்ற சூழல் நிலவினாலும், சட்டத்தை மீறும் மதகுருமார்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டினை அந்நாட்டின் இராணுவ ஆட்சியாளர் எடுத்துள்ளனர்.

இம்மாத தொடக்கத்தில்தான், தாய்லாந்தின் சர்ச்சைக்குரிய துறவி ஒருவர், தனியார் ஜெட் விமானத்தில் லூயில் வுய்ட்டன் பையுடன் இருக்கும் வீடியோ வெளியானதை அடுத்து, கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றிய பணச்சலவை & மோசடி வழக்கில் 114 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

.