This Article is From Aug 24, 2020

"உங்க வாயிலயே குத்தணும்..!"- பத்திரிகையாளர்கள் பற்றி பிரேசில் அதிபரின் சர்ச்சை பேச்சு

அதிபர் யெஜர் போல்சானரோ, 'உங்க வாயிலே குத்தனும்' என்று மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார். அதிபரின் இந்த பேச்சுக்கு சகப்பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

அதிபரின் இந்த பேச்சுக்கு சகப்பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

Sao Paulo:

பிரேசில் அதிபரிடம் அவரது மனைவியின் வங்கிக்கணக்கு விவரங்களைக் கேட்ட பத்திரிகையாளரை, முகத்தில் குத்துவேன் என்று அதிபர் ஜெய்ர் மிரட்டல் தோனியில் பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

பிரேசிலில் அதிபர் ஜெய்ர் போல்சானரோ தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரையில் அதிபர் ஜெய்ரின் மனைவிக்கும், மைக்கேல் போல்சானரோவுக்கும் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் குறித்து ஓ குளோபல் என்ற பத்திரிகை நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. 

இந்த நிலையில், கடந்த ஞாயிறன்று அதிபர் ஜெய்ர் போல்சானரா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஒ குளோபல் பத்திரிகையின் நிருபர் அதிபர் போல்சானரோவிடம் நேரடியாகவே அவரது மனைவியின் வங்கிக்கணக்கு விவரங்களைக் கேட்டார். 

இதனால் ஆத்திரமடைந்த அதிபர் யெஜர் போல்சானரோ, 'உங்க வாயிலே குத்தனும்' என்று மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார். அதிபரின் இந்த பேச்சுக்கு சகப்பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

இதனையடுத்து அங்கிருந்து அதிபர் ஜெய்ர் போல்சானரோ அமைதியாக நகர்ந்து சென்று விட்டார். முன்னதாக குயிரோஸ் 2011-2016 ஆண்டுகளில் மைக்கேல் போல்சானரோவின் வங்கிக்கணக்கிற்கு டெப்பாசிட் செய்தார். இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்த பிறகு, அவர் இதுபற்றி ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. 

பத்திரிகையாளரின் இவ்வாறு கேள்வி கேட்டது, தொழில்முறையான ஒரு செய்தியாளர் பணியை சரியாக செய்துள்ளதாக ஓ குளோபல் பத்திரிகை மறுப்பு வெளியிட்டுள்ளது.

.