வெள்ளத்தில் சிக்கிய ஆம்புலன்ஸுக்கு உயிரை பணயம் வைத்து வழிகாட்டிய 12 வயது சிறுவன்!

சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வரும் சிறுவன் வெங்கடேஷின் வீடியோவில், தரைப்பாலம் எது என்று தெரியாத அளவுக்கு பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில், ஆம்புலான்ஸூக்கு வழி காட்டியுள்ளான்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
வெள்ளத்தில் சிக்கிய ஆம்புலன்ஸுக்கு உயிரை பணயம் வைத்து வழிகாட்டிய 12 வயது சிறுவன்!

12 வயது சிறுவன் வெங்கடேஷை கர்நாடகா துணை ஆணையர் ஷரத் பாராட்டியுள்ளார்.


Raichur: 

சுதந்திர தினமான நேற்று, வெள்ளத்தில் சிக்கிய ஆம்புலன்ஸுக்கு உயிரை பணயம் வைத்து வழிகாட்டிய 12 வயது சிறுவன் வெங்கடேஷை கர்நாடக துணை ஆணையர் ஷரத் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வரும் சிறுவன் வெங்கடேஷின் வீடியோவில், தரைப்பாலம் எது என்று தெரியாத அளவுக்கு பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில், ஆம்புலான்ஸூக்கு வழி காட்டியுள்ளான். 

கர்நாடகா மாநிலத்தில் இடைவிடாது கொட்டிய பருவ மழையால், எங்கும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. இந்த மழை வெள்ளத்தில் இதுவரை சுமார் 61 பேர் உயிரிழந்துள்ளதாக கர்நாடக தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் தெரிவித்துள்ளனர். 

வெள்ள பாதிப்பு ஏற்பட்ட 22 மாவட்டங்களில், பெலாகாவி என்ற மாவட்டத்தில் மட்டும் 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், தகவலின் படி 14 பேர் மாயமாகியுள்ளனர். 

இதனிடையே, ராய்ச்சூர் மாவட்டம் ஹிரேரயனகும்பி கிராமம், மழை, வெள்ளத்தால் தீவு போல் இருந்தது. அங்கிருந்த தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கவே, பெண்ணின் சடலம் மற்றும் உடல்நலம் குன்றிய குழந்தைகளை ஏற்றிக் கொண்டு வந்த ஆம்புலன்ஸ் வழி தெரியாமல் வெள்ளத்தில் சிக்கியது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அருகில் இருந்தவர்களிடம் உதவி கேட்டார்.   

அப்போது அங்கே இருந்த நீர்நிலையில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவன், துளி நேரமும் தாமதிக்காமல் ஆம்புலன்ஸுக்கு வழிகாட்டினான்.

ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம், தன்னை பின்தொடர்ந்து வரும்படி மேம்பாலத்தில் ஓடும் வெள்ளத்தைக் கடந்து ஓடி வந்தான் சிறுவன், அவனை பின்தொடர்ந்து ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருந்தது. இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதால் வெங்கடேஷ் பற்றிய புகழும் பரவியது.

வெள்ளத்தில் சிக்கிய ஆம்புலன்சுக்கு வழிகாட்டிய 12 வயது சிறுவனுக்கு, கர்நாடக அரசு துணிச்சலுக்கான விருது வழங்கி கவுரவித்துள்ளது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................