This Article is From Dec 29, 2018

141 வருட டெஸ்ட் வரலாற்றில் இப்படி ஒரு 'டக்' ரெக்கார்டு!

டக் அவுட் ஆகி 141 வருட டெஸ்ட் வரலாற்றில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளனர்

141 வருட டெஸ்ட் வரலாற்றில் இப்படி ஒரு 'டக்' ரெக்கார்டு!

பாகிஸ்தான் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த டெஸ்ட் போட்டியில் சுவார்ஸ்யம் என்னவென்றால் இதில் 141 வருட டெஸ்ட் வரலாற்றில் முக்கியமாக அரிய நிகழ்வு நிகழ்ந்ததுதான்.

கிரிக்கெட்டில் ஒரு வீரர் இரண்டு இன்னிஙஸிலும் டக் அவுட் ஆவது எப்போதாவது நடக்கும். சொல்லி வைத்தது போல இரு அணி கேப்டன்களும் இரண்டு இன்னிஙஸிலும் டக் அவுட் ஆகி 141 வருட டெஸ்ட் வரலாற்றில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

முதல் பந்திலேயே அவுட் ஆவதை கோல்டன் டக் என்றும் இரண்டு இன்னிஙஸிலும் டக் அவுட் ஆவதை கிங் ஆஃப் பேர் என்றும் குறிப்பிடுவார்கள்.

இதுவரை 142 வருட டெஸ்ட் வரலாற்றில் 20 கேப்டன்கள் கிங் ஆஃப் பேர் வாங்கியுள்ளனர். ஆனால் ஒரே டெஸ்ட்டில் இரண்டு கேப்டன்கள் வாங்குவது இதுவே முதல்முறை. இது இணையத்தில் பெரிதும் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.

.