This Article is From Mar 19, 2020

மாநிலங்களவை தேர்தலில் பாஜக பணத்தையும், பலத்தையும் பயன்படுத்துகிறது: நவாப் மாலிக்

இதே விஷயம் தான் மத்தியப் பிரதேசத்திலும் நடந்து வருகிறது. அங்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிறைவைக்கப்பட்டுள்ளனர் என்றார் நவாப் மாலிக்.

மாநிலங்களவை தேர்தலில் பாஜக பணத்தையும், பலத்தையும் பயன்படுத்துகிறது: நவாப் மாலிக்

குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கும் பணம் வழங்கப்படுவதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.

ஹைலைட்ஸ்

  • மாநிலங்களவை தேர்தலில் பாஜக பணத்தையும், பலத்தையும் பயன்படுத்துகிறது
  • பாஜக அரசியல் செய்யும் முறை வெளிப்பட்டுள்ளது.
  • இதே விஷயம் தான் மத்திய பிரதேசத்திலும் நடந்து வருகிறது.
Mumbai:

மாநிலங்களவை தேர்தலில் பாஜக பணத்தையும், பலத்தையும் பயன்படுத்துகிறது என மகாராஷ்டிரா அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான நவாப் மாலிக் தெரிவித்துள்ளார். 

பாஜக அரசியல் செய்யும் முறை வெளிப்பட்டுள்ளது. அவர்கள் மாநிலங்களவை தேர்தலில் பணத்தையும், பலத்தையும் பயன்படுத்துகிறது. குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கும் பணம் வழங்கப்படுவதாகத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார். 

இதே விஷயம் தான் மத்தியப் பிரதேசத்திலும் நடந்து வருகிறது. அங்குக் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிறைவைக்கப்பட்டுள்ளதோடு, அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் சந்திக்க அனுமதி வழங்கப்படுவதில்லை என்றார் நவாப் மாலிக். 

தொடர்ந்து, மகாராஷ்டிரா அரசு கொரோனா வைரஸ் பரவி வருவதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார். 

அனைத்து கல்வி நிறுவனங்களும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், திரையரங்குகள், மூடப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களிலும் ஊழியர்களைக் கணிசமான அளவு குறைக்கத் திட்டமிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

.