This Article is From Nov 08, 2018

முஸ்லிம்களை திருப்திபடுத்த திப்பு ஜெயந்தி - காங்கிரசை சீண்டும் பாஜக

திப்பு ஜெயந்திக்கு பதிலாக முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாளை கர்நாடக அரசு கொண்டாட வேண்டும் என்று பாஜக கூறியுள்ளது.

முஸ்லிம்களை திருப்திபடுத்த திப்பு ஜெயந்தி - காங்கிரசை சீண்டும் பாஜக

கன்னட மொழி மற்றும் இந்துக்களுக்கு எதிராக திப்பு ஜெயந்தி உள்ளதென்று சில பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Kasargod/Bengaluru:

கர்நாடகத்தில் திப்பு சுல்தான் பிறந்த நாள்விழா திப்பு ஜெயந்தியாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, கர்நடக முன்னாள் முதல்வரும் மாநில பாஜக தலைவருமான எட்டியூரப்பா கருத்து தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

திப்பு ஜெயந்தி குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், திப்பு ஜெயந்தியை யாரும் விரும்பி கொண்டாடவில்லை. முஸ்லிம்களை திருப்திபடுத்துவதற்காக காங்கிரஸ் கட்சி திப்பு ஜெயந்தியை கொண்டாடுகிறது. இதற்கு காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளுக்கு உள்ளேயே எதிர்ப்பு காணப்படுகிறது.

திப்பு ஜெயந்தியை கொண்டாடுவதற்கு பதிலாக முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாளை கர்நாடக அரசு கொண்டாட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதற்கு காங்கிரஸ் கட்சி பதில் அளித்துள்ளது. இதுபற்றி அக்கட்சியின் மூத்த தலைவர் டி.கே. சிவகுமார் அளித்த பேட்டியில், நாட்டுக்காக தியாகம் செய்தவர்களை பாஜக எப்போதும் எதிர்த்துதான் பேசி வருகிறது.

திப்பு சுல்தானுக்கு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. அவர் பிறந்தநாளை கொண்டாடுவதில் எந்தவித தவறும் இல்லை. இந்துக்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் இடையே பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் பாஜகவின் திட்டம். திப்பு சுல்தானைப் பற்றி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பாராட்டி பேசியுள்ளார் என்று தெரிவித்தார்.

கடந்த 1799-ம் ஆண்டின்போது தனது மைசூர் அரசின் தலைநகர் சீரங்கபட்டினத்தை காப்பாற்றும் முயற்சியில் திப்பு சுல்தான் ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்டார். சீரங்கபட்டினம் பகுதி தற்போது மாண்டியா என்று அழைக்கப்படுகிறது.

.