வாக்குச்சாவடியில் உயிரிழந்த பாஜக வேட்பாளர்!

ஆசாத் சிங் ராஜூ(62) நீர் பாசன மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத்துறையின் முன்னாள் ஊழியர் ஆவார்

 Share
EMAIL
PRINT
COMMENTS
வாக்குச்சாவடியில் உயிரிழந்த பாஜக வேட்பாளர்!

ராம்பன் மாவட்டம் சார்பாக உள்ளாட்சித் தேர்தலில் பேட்டியிடும் 24 வேட்பாளர்களில் ஆசாத் சிங் ராஜூவும் ஒருவர்.


Banihal/Jammu: 

ஜம்மு காஷ்மீர், ராம்பன் மாவட்டத்தில் நடைபெற்று வரும் உள்ளாட்சித் தேர்தலில் தன்னுடைய வாக்கினை செலுத்த வந்த பாஜக வேட்பாளர் மாரடைப்பால் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆசாத் சிங் ராஜூ (62) நீர்பாசன மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத்துறையின் முன்னாள் ஊழியர் மற்றும் பாஜக வேட்பாளர் தன்னுடைய வாக்கினை செலுத்த வந்த போது உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர்.

ராம்பன் மாவட்டம் சார்பாக உள்ளாட்சித் தேர்தலில் பேட்டியிடும் 24 வேட்பாளர்களில் ஆசாத் சிங் ராஜூவும் ஒருவர். மாரடைப்பு ஏற்பட்டதும் அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஜம்மு காஷ்மீரின் சுற்றுவட்டாரத்திலிருக்கும் 263 நகராட்சி தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது இதில் 6 மாவட்டன்ங்கள் உட்பட. 214 தொகுதிகளும் அடங்கும். வாக்குப் பதிவு காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிக்கு முடிவடையும். இந்த வாக்குச்சாவடிகளில் போதுமான பாதுகாப்பு வசதிகளை அதிகாரிகள் செய்துள்ளனர்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................