This Article is From Dec 20, 2018

புயல் நிவாரணப் பொருட்கள் வழங்குவதில் பெரும் முறைகேடு: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

கஜா புயல் நிவாரணப் பொருட்கள் வழங்குவதில் பெரும் முறைகேடு நடந்துள்ளது என அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

புயல் நிவாரணப் பொருட்கள் வழங்குவதில் பெரும் முறைகேடு: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

கஜா புயல் நிவாரணப் பொருட்கள் வழங்குவதில் பெரும் முறைகேடு நடந்துள்ளது என அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

27 வகையான நிவாராண பொருட்களை கொடுக்கிறோம் என்று சொன்ன அரசு, அதை வழங்கியதில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பதாக பத்திரிக்கை செய்தி மூலம் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி அரசு எந்த திட்டத்தை செயல்படுத்தினாலும் அதில் ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகாமல் இருந்தது கிடையாது, கஜா புயலால் வாழ்வாதாரத்தை இழந்து நடுவீதியில் நிற்கும் மக்களுக்கு கொடுக்கக்கூடிய நிவாரண பொருட்களில் கூடவா இந்த அரசு முறைகேடு குற்றச்சாட்டுக்கு உள்ளாகும்?

அக்கறையற்ற தனத்தோடும், மக்களை ஏளனமாக பார்க்கும் எண்ணம் கொண்ட ஒரு அரசு தமிழகத்தில் அமைந்திருப்பது மிகப்பெரிய துரதிஷ்டவசமானது. இது விரைவில் அகற்றப்பட வேண்டிய அரசு. மனசாட்சியும், மனித நேயமும் அற்றுப்போன ஒரு செயலை இந்த அரசாங்கம் செய்திருப்பதாக வரும் செய்திகள் யாராலும் தாங்கிக் கொள்ளமுடியாத ஒன்று.

இந்த குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை குறித்த விரிவான விசாரணையை பழனிசாமி அரசு மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்துவதோடு, பாதிக்கப்பட்ட மக்கள் ஒவ்வொருவருக்கும் அரசின் நிவாரண உதவிகள் முறையாக சென்று சேருவதை பழனிசாமி அரசு உறுதி செய்யவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

.