"இருக்கு, சம்பவம் இருக்கு!", பிக் பாஸ் வீட்டில் சிறப்பு விருந்தினராக 'வனிதா'!

அந்த வாரத்திற்கான லக்சரி பட்ஜெட் டாஸ்க் அறிவிக்கப்பட்டது. பிக் பாஸ் வீடு பிக் பாஸ் ஹோட்டலாக மாற்றப்பட்டது. வனிதாவை சிறப்பு விருந்தினராக உள்ளே அனுப்பி வைத்தார் பிக் பாஸ்.

 Share
EMAIL
PRINT
COMMENTS

லக்சரி பட்ஜெட் டாஸ்க்- சிறப்பு விருந்தினராக வனிதா!


Bigg Boss Tamil Season 3: பிக் பாஸ் வீட்டின் காலை, குறை கேட்டறியும் வேலையாக இருந்தது. மன்னர் சாண்டி (Sandy), அமைச்சர் கவின் (Kavin), தளபதி தர்ஷன் (Dharshan), ஒற்றன் முகேனுடன் சென்று, பிக் பாஸ் வீட்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார். என்ன மன்னர், இந்த நாட்டு மன்னர் போல இல்லை, மங்கோலிய நாட்டு மன்னர் போல இருந்தார்.

சாண்டி மன்னராக பதவியேற்ற பிறகு மைசூர்பாகு வந்தது, புது ஆடை கிடைத்தது, சிக்கன் வந்தது, மீன் வந்தது, பிரியானி வரப்போகிறது என அடுக்கினார் கவின். அதற்கு சரமாரியாக குற்றங்களையும் அடுக்கினார்கள். என்ன குற்றங்கள் இருந்தாலும், கடைசியில் மன்னர் ஆட்சி மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது, மக்கள் அனைவரையும் மன்னர் மிகவும் மகிழ்ச்சியுடன் வைத்திருந்தார், மன்னருடன் சேர்ந்து அமைச்சர், தளபதி, ஒற்றன் என அனைவரும் மக்களை மகிழ்ச்சியாகவே வைத்திருந்தனர். ஆட்சி முடியும் வரை இதே தொடர வேண்டும் என லாஸ்லியா செய்தி வாசித்து குறை கேட்புக் கூட்டத்தை முடிவு செய்து வைத்தார்.

l8ev5it8

அடுத்து நாமினேஷன், முன்னதாகவே கஸ்தூரியை (Kasthuri) நாமினேட் செய்யக்கூடாது என்ற அறிவிப்புடன் இந்த வார நாமினேஷனை துவங்கினார் பிக் பாஸ். நேற்று நான் யாரையும் நாமினேட் செய்யப்போவதில்லை என செரின் கூறியிருந்தார். ஆனால், இன்று நாமினேஷனில் செரின் அப்படி செய்யவில்லை, மாறாக அபிராமி, நான் நாமினேட் செய்யப்போவதில்லை என அமர்ந்திருந்தார். பிக் பாஸ் வற்புருத்த கவின், மதுமிதாவை நாமினேட் செய்தார். கஸ்தூரியை நாமினேட் செய்யக்கூடாது என துவங்கிய நாமினேஷன், கஸ்தூரியுடனே முடிந்தது. அபிராமி, முகேன், கவின், லாஸ்லியா மற்றும் மதுமிதா ஆகியோர் இந்த நாமினேஷனில் இடம்பிடித்தனர்.

2co74ve8

அன்றைய நாள் இரவு வரை, வீட்டில் பேசப்பட்ட ஒரு விஷயம் அபிராமி (Abirami) - முகேன் (Mugen). நேற்று நடந்த நிகழ்வில் அபிராமி மிகவும் மனமுடைந்து போயிருந்தார். இந்தனை நாள் நண்பர்களாக சேர்ந்து பழகியது அபிராமி, முகேன் என இருவரும் தானே, தற்போது மொத்த குற்றத்தையும் அபிராமி என்ற ஒருவர் மீது மற்றும் சுமத்தினால் அவர் எப்படி தாங்கிக்கொள்வார். இது அபிராமிக்கு ஒரு பெரிய மன அழுத்தமாக இருந்தாலும், நேற்று அவ்வளவு பெரிதாக கமல் அந்த பிரச்னையை அபிராமி முன் அடையாளப்படுத்துகிறார், ஆனால் இவ்வளவு நெருங்கிய நட்பு வட்டாரத்திற்குள் இருக்கும் முகேன், அவரும் அந்த பிரச்னையில் அபிராமிக்கு ஆதரவாக இல்லை. இதுதான் அபிராமியை இன்னும் மனக்கஷ்டத்திற்கு ஆளாக்கியுள்ளது. இது அவரது வருத்தமாக மட்டும் இல்லை. வீட்டில் உள்ள பலரும் இதேபோல கருதுகிறார்கள்.

6u749ll8

இப்படி கவலை நிறைந்ததாக இருந்த வீட்டை மீட்டெடுக்கும் வகையில் பிக் பாஸ் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். "இன்று கமல்ஹாசன் என்னும் மிகப்பெரிய கலைஞன் கலைத்துறையில் காலடி எடுத்து வைத்து 60 ஆண்டுகள் முடிவடைகின்றன. இன்றைய நாளில் ஒரு பிரமாண்ட சினிமா துவங்க இருக்கிறது, 'இந்தியன்-2' (Indian 2). சமுக சீர்திருத்த திரைப்படங்களில் 'இந்தியன்' முக்கியமான பங்கு வகிக்கிறது என்றால் மிகையாகாது. உலக சினிமா வரலாற்றில் 60 ஆண்டுகள் கடந்த கலைஞர்களில் கமல் சாரும் ஒருவர் என்பது நாம் அனைவரும் பெருமைகொள்ள வேண்டிய விஷயம்" என்று பிக் பாஸ் அறிவித்தார். அதன்பின், இந்தியன்-2 திரைப்படத்தின் கமலுடைய சில புகைப்படங்களை காட்சிப்படுத்தினார் பிக் பாஸ்.

ekqoqs3g

அந்த வாரத்திற்கான லக்சரி பட்ஜெட் டாஸ்க் அறிவிக்கப்பட்டது. பிக் பாஸ் வீடு பிக் பாஸ் ஹோட்டலாக மாற்றப்பட்டது. ஹோட்டல் மேனேஜர் சேரன், செஃப் மதுமிதா, ரூம் சர்வீஸ் தர்ஷன், அபிராமி, கஸ்தூரி, ஹவுஸ் கீப்பிங் கவின், சாண்டி, ஸ்பா செரின், என்டர்டெய்னர்ஸ் லாஸ்லியா, முகேன் என அவர் அவர் வேலைகளை பிரித்துக் கொடுக்கப்பட்டன. 

ஹோட்டல் என்றால் விருந்தினர்கள் வேண்டுமல்லவா? எனவே, முன்னதாக பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட வனிதாவை சிறப்பு விருந்தினராக உள்ளே அனுப்பி வைத்தார் பிக் பாஸ். வீட்டில் சுவாரஸ்யம் குறைந்துவிட்டது. வீடு எப்போதுமே மேகமூட்டத்துடனேயே காணப்படுகிறது. அங்கு இடியையும், மின்னலையும் ஏற்படுத்தும் நோக்கத்தில்தான் பிக் பாஸ் வனிதாவை உள்ளே அனுப்பினாரா?

u8s08ro

உள்ளே வந்த வனிதாவிற்கு ஆரவார வரவேற்பு அளிக்கப்பட்டது. பின் அனைவரையும் அழைத்து உட்காரவைத்த வனிதா (Vanitha), சரமாரியாக கழுவி ஊற்றினார். இன்னும் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், லக்சரி பட்ஜெட் டாஸ்க் (Luxury Budget Task) முடியும் வரை வனிதா வீட்டிற்குள்தான் இருப்பார். தற்போதே பிக் பாஸ் ரசிகர்கள், ஏற்கெனவே வெளியேற்றப்பட்ட ஒருவரை ஏன் மீண்டும் வீட்டிற்குள் அனுப்பப்பட்டார் என்ற குழப்பத்திலும், அதிருப்தியிலும் உள்ளனர்.

ஆனால், ஒன்று மட்டும் உறுதி, சாண்டி-கவின் கூறியதுபோல், "இருக்கு, சம்பவம் இருக்கு!"சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................