'உன்னை இப்படியா வளர்த்தேன்': Bigg Boss வீட்டில் கோவத்துடன் நுழைந்த லாஸ்லியாவின் அப்பா!

ப்ரீஷ் டாஸ்க்கின் ஒரு பகுதியாக, லாஸ்லியாவின் அப்பா வீட்டிற்குள் நுழைந்தார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
'உன்னை இப்படியா வளர்த்தேன்': Bigg Boss வீட்டில் கோவத்துடன் நுழைந்த லாஸ்லியாவின் அப்பா!

Bigg Boss Tamil, Losliya:பிக் பாஸ் வீட்டில் சேரன், லாஸ்லியாவின் அப்பா


Bigg Boss 3 Tamil: இந்த வாரத்திற்கான நாமினேஷன் (Bigg Boss Nomination) முடிந்தவுடன், இந்த வாரத்திற்கான லக்சரி பட்ஜெட் டாஸ்க் (Bigg Boss Luxury Budget Task) அறிவிக்கப்பட்டது. இந்த வாரம் முழுவதும் வீட்டு போட்டியாளர்களின் கட்டுப்பாடு இனி பிக் பாஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்ட டாஸ்கில், ஃபிரீஷ், ஸ்லோ-மோஷன், பார்வேர்ட், ரீவைன்ட் என கேமரா கட்டுப்பாடுகளை அறிவித்தார். ஃபிரீஷ் சொல்லி இந்த டாஸ்க்கை ஆரம்பித்தார் பிக் பாஸ். முதலில் சாண்டிக்கு (Sandy) ரிலீஸ் சொல்ல, அவர் செய்த அலப்பறையை கண்டு, அவருக்கு ப்ரீஷ் சொல்லி மற்றவர்களை ரிலீஷ் செய்து அட்டகாசங்களை வேடிக்கை பார்த்தார் பிக் பாஸ். இந்த ப்ரீஷ் டாஸ்க்கின் மற்றொரு பகுதியில் முகெனின் (Mugen) அம்மா மற்றும் தங்கையை உள்ளே அனுப்பு மகிழ்ச்சி அளித்தார்.

அடுத்து அன்றைய நாளின் இரவில், நேற்றைய நிக்ழ்ச்சியை பார்த்துவிட்டு சேரன் (Cheran) உங்களிடம் சில கேள்விகளை கேட்க விரும்புகிறார் என சேரன் கேட்ட கேள்விகளை அடுக்கினார். அப்போது சேரன் கேட்ட ஒரு கேள்வி, இன்றைய நாள் நிகழ்ச்சியின் அடிப்படையில் அமைந்திருந்ததை அடுத்து, அவர் சீக்ரெட் ரூமில்தான் இருக்கிறார் எனத் தெரிந்தோ தெரியாமலோ பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு ஹின்ட் கொடுத்துவிட்டார், வனிதா (Vanitha) அதை உறுதியே செய்துவிட்டார்.

இன்னிலையில் இன்றைய நாளின் நிகழ்ச்சியில், அதே ஃப்ரீஷ் டாஸ்க்கின் ஒரு பகுதியாக, விக்ரம் வேதா பின்னனியுடன் லாஸ்லியாவின் சேரப்பா வீட்டிற்குள் நுழைந்தார். அவர் மட்டுமில்லாமல் இன்னொருவரும் உள்ளே நுழைந்தார். 'ஆனந்த யாழை மீட்டுகிறாய்' பாடல் ஓலிக்க, லாஸ்லியா (Losliya) கதறி அழுக லாஸ்லியாவின் அப்பா உள்ளே வந்தார். அவர் மிகவும் கோவத்துடன் உள்ளே வந்தார் என்பது, அவரின் முகமே காட்டிக்கொடுத்தது.

இன்னிலையில், உள்ளே வந்த லாஸ்லியாவின் தந்தை,"உன்னை அப்படியா வளர்த்தேன். இது என்ன, நான் கதைக்கக்கூடாது", என்றும் "என்ன சொல்லி வந்த, எல்லாத்தையும் தூக்கி எரிஞ்சிட்டு உள்ள வா'' என்றபடி வீட்டிற்குள் நுழைந்தார். இந்த நிகழ்வின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளன. அந்த காட்சிகளின் மூலம் லாஸ்லியாவின் தங்கையும் உள்ளே வந்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த பிரச்னை பெரிதாக பின்தொடராமல், வழக்கமான மற்றொரு பிக் பாஸ் நாளாகவே கடந்தது. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................