கவினை நினைத்து கதறி அழும் லோஸ்லியா மற்றும் சாண்டி ; சமாதானம் செய்யும் நண்பர்கள்

முதலாவதாக எழுந்த கவின் நான் இந்த தொகையை பெற்றுக்கொண்டு வீட்டை விட்டு வெளியேற தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்தார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
கவினை நினைத்து கதறி அழும் லோஸ்லியா மற்றும் சாண்டி ; சமாதானம் செய்யும் நண்பர்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 95 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கோல்டன் டிக்கெட் மூலம் நேரடியாக இறுதி சுற்றுக்கு முகேன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரைத் தவிர வீட்டில் உள்ள மற்ற ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் இந்த வாரம் நாமினேஷனில் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

இந்நிலையில் போட்டியில் இறுதியில் வெற்றி பெறும் நபருக்கே ரூபாய் 50 லட்சம் வழங்கப்படும். அதற்கு முன்னர் ரூ.5 லட்சம் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்த பிக்பாஸ் யார் இத்தொகையைப் பெற்றுக் கொண்டு இப்போதே வெளியேறத் தயாராக இருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்புகிறார்.

அதற்கு முதலாவதாக எழுந்த கவின் நான் இந்த தொகையை பெற்றுக்கொண்டு வீட்டை விட்டு வெளியேற தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து வீட்டில் உள்ள மற்ற ஹவுஸ்மேட்கள் கவினிடம் வீட்டை விட்டு போக வேண்டாம் என்று கூறியும் அவர் நேற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தார்.

அனைத்து போட்டியாளர்களிடமும் விடைபெறும் கவினைப் பார்த்து லாஸ்லியா கண்ணீர் விடுகிறார். கவின் அப்பாவின் புகைப்படத்தைக் கையில் கொடுத்து ‘உன் குடும்பத்திற்காக நன்றாக விளையாடி விட்டு 10 நாளை முடித்து விட்டு வா. எல்லாவற்றையும் வெளியில் வந்து பேசிக் கொள்ளலாம்.” என்றுகூறுகிறார். சாண்டியிடம் சென்று வெளியே செல்வதற்கான காரணத்தையும் சொல்லி விட்டு கதறி அழுத சாண்டியை சமாதனமும் செய்துவிட்டு வெளியேறுகிறார்.

வெளியேறும் முன் லோஸ்லியா, கவின் இருவரும் விரல்களைப் பற்றிக் கொண்டு பிரியா விடை கொடுக்கின்றனர். கவின் வெளியேறியது லோஸ்லியாவை சோகத்தில் மூழ்கச் செய்துள்ளது. லோஸ்லியா அழுது கொண்டே இருப்பதை பார்த்து சக நண்பர்கள் சமாதானம் செய்கின்றனர். சாண்டியும் வருத்தத்துடன் கண்ணீர் விட்டபடி இருக்கிறார்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................