This Article is From Dec 17, 2018

முஸ்லிம்களுக்கு எதிரான பதிவு: இஸ்ரேல் பிரதமர் மகனை தடை செய்தது ஃபேஸ்புக்!

''உலகில் எங்கெல்லாம் தாக்குதல் நடைபெறுவதில்லை தெரியுமா, ஐஸ்லாந்திலும், ஜப்பானிலும் தான். ஏனென்றால், அங்குதான் முஸ்லிம்கள் இல்லை'' என்று யார் பதிவிட்டிருந்தார்.

முஸ்லிம்களுக்கு எதிரான பதிவு: இஸ்ரேல் பிரதமர் மகனை தடை செய்தது ஃபேஸ்புக்!

யாரின் பதிவுக்கு பிறகு இரண்டு ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

Jerusalem:

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமினின் மகன் யாரின் ஃபேஸ்புக் பக்கம் 24 மணி நேரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் "சமூக வலைதளப்பக்கத்தின் சர்வாதிகாரபோக்கு" என விமர்சித்துள்ளார்.

பாலஸ்தீன தாக்குதலுக்கு பிறகு யார் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதிவு 'முஸ்லிம்களுக்கு எதிரான பதிவு' என கூறி ஃபேஸ்புக் அந்தப் பதிவை நீக்கியது மட்டுமல்லாமல், யாருக்கு 24 மணி நேரம் ஃபேஸ்புக் பயன்படுத்த தடையும் விதித்தது. அந்தப் பதிவில் "எல்லா முஸ்லிம்களும் இஸ்ரேலை விட்டு வெளியேறுங்கள்" என்று தெரிவித்திருந்தார்.

மேலும் ''உலகில் எங்கெல்லாம் தாக்குதல் நடைபெறுவதில்லை தெரியுமா, ஐஸ்லாந்திலும், ஜப்பானிலும் தான். ஏனென்றால், அங்குதான் முஸ்லிம்கள் இல்லை'' என்றும் பதிவிட்டிருந்தார்.

"ஒன்று எல்லா இஸ்ரேலியர்களும் வெளியேற வேண்டும், இல்லையென்றால் எல்லா முஸ்லிம்களும் வெளியேற வேண்டும். இரண்டாவது தான் சரியானது" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் பதிவுக்கு பிறகு இரண்டு ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஃபேஸ்புக் யாரை கண்டித்து, இந்தப் பதிவை நீக்கியதால், அவர் இதனை ட்விட்டரில் பதிவிட்டு ஃபேஸ்புக்கை 'சர்வாதிகார அமைப்பு' என்று கூறியுள்ளார்.

27 வயதான யாரை, இஸ்ரேலை ஆள்வதற்காக பெஞ்சமின் தயார் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

.