This Article is From Jan 31, 2019

''புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள்''- சாதுக்களிடம் வேண்டுகோள் விடுத்த ராம்தேவ்

உத்தர பிரதேசத்தில் பிரமாண்ட விழாவான கும்பமேளா 55 நாட்கள் நடைபெறுகறிது. இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.

''புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள்''- சாதுக்களிடம் வேண்டுகோள் விடுத்த ராம்தேவ்

கும்பமேளாவில் சாதுக்களுடன் உரையாடும் பாபா ராம்தேவ்.

Prayagraj:

ராமரும், கிருஷ்ணரும் புகைப்பிடிக்க மாட்டார்கள். நாம் எதற்காக புகைப்பிடிக்க வேண்டும் என்று சாதுக்களிடம் யோகா குரு பாபா ராம்தேவ் கேள்வி எழுப்பியுள்ளார். புகைப்பிடிப்பதை நிறுத்துமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

உத்தர பிரதேசத்தில் கும்பமேளாக 55 நாட்களாக நடைபெறுகிறது. இதில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கானோர் கலந்து  கொண்டுள்ளனர். நாட்டில் உள்ள பெரும்பாலான பிரபலங்கள் இந்த விழாவில் பங்கேற்கின்றனர். 

இந்த நிலையில் யோகா குரு பாபா ராம்தேவ் கும்பமேளாவுக்கு சென்றுள்ளார். அங்கு சாதுக்களிடம் உரையாற்றிய அவர், ''நாம் ராமரையும், கிருஷ்ணரையும் பின்பற்றுகிறோம். அவர்கள் யாரும் புகைப்பிடித்தது இல்லை. அப்புறம் எதற்காக நாம் புகைப்பிடிக்க வேண்டும்?. 

புகைப்பிடிக்கவே மாட்டோம் என்று நாம் உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் அனைவரும் சாதுக்கள். நாம் வீடு, அம்மா, அப்பா, உள்ளிட்ட அனைவரையும் உயர்ந்த காரணத்திற்காக விட்டு வந்து விட்டோம். எல்லாவற்றையும் விட்ட நம்மால் இந்த புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட முடியாதா?'' என்று கூறினார். 

.