This Article is From Jan 14, 2020

ஆஸ்திரேலியாவில் 3வாரங்களுக்கு பின் மழைக்காடுகளில் தொலைந்த நபர் கண்டுபிடிப்பு

மிலன் லெமிக், காட்டுப் பழம் மற்றும் பெர்ரிகளை சாப்பிட்டு உயிர் பிழைத்ததாக தெரிவித்தனர்.

ஆஸ்திரேலியாவில் 3வாரங்களுக்கு பின் மழைக்காடுகளில் தொலைந்த நபர் கண்டுபிடிப்பு

29 வயதான மிலன் லெமிக்கை முதலை இழுத்துச் சென்றிருக்கலாம் என்று ஆரம்பத்தில் போலீஸார் அஞ்சினார் (Representational)

Sydney, Australia:

ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஒருவர் வடகிழக்கு மழைக்காடுகளில் தொலைந்து போன ஒருவரை மூன்று வாரங்களுக்கு பின் கண்டறிந்ததாக அந்நாட்டு போலீஸார் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மாநிலமான குயின்ஸ்லாந்தில் உள்ள டெய்ண்ட்ரீ காடு வழியாக பயணித்த போது டிசம்பர் 22-ம் தேதி மிலன் லெமிக் வாகனம் மோதியதில் காணாமல் போனார்.

29 வயதான  மிலன் லெமிக்கை முதலை இழுத்துச் சென்றிருக்கலாம் என்று ஆரம்பத்தில் போலீஸார் அஞ்சினார். ஏனென்றால் இப்பகுதியில் முதலைகள் அதிகம். ஆனால் மனிதரை இழுத்துச் சென்றதாக எந்தவொரு முதலையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

அவர் கைவிடப்பட்ட வாகனத்திலிருந்து பல கிலோமீட்டர் தொலைவில் போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டார்.

“மூன்று வாரங்களாக மழைக்காடுகளில் இருந்ததில் நல்ல உடல் நிலையுடனே இருந்தார்.” என்று காவல்துறை அறிக்கையில் தெரிவித்தனர். 

மிலன் லெமிக் காட்டுப் பழம் மற்றும் பெர்ரிகளை சாப்பிட்டு உயிர் பிழைத்ததாக தெரிவித்தனர். 

.