This Article is From Feb 06, 2020

நாயுடன் 2 ஆண்டுகளாக ஒன்றாக வாழும் சிறுத்தைப்புலி! அன்பு இனம் அறியாது!!

சிறுத்தைப் புலிகள் இயற்கையிலேயே வெட்க உணர்வு கொண்டவையாக இருக்கும். நாயுடன் அவை இருக்கும்போது தன்னம்பிக்கை அதிகம் இருப்பதாக சிறுத்தைகள் உணர்கின்றன என்று உயிரியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

நாயுடன் 2 ஆண்டுகளாக ஒன்றாக வாழும் சிறுத்தைப்புலி! அன்பு இனம் அறியாது!!

அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி உயிரியல் பூங்காவில் நாய் 'போவி' மற்றும் சிறுத்தை 'நண்டி'.

அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி உயிரியல் பூங்காவில் நாய் 'போவி'யுடன், சிறுத்தை 'நண்டி' கடந்த 2 ஆண்களுக்கும் மேலாக ஒன்றாக வசித்து வருகிறது. இவை ஒன்றுக்கொன்று அன்பை பரிமாறிக் கொள்ளும் காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்படுகின்றன. 

இருவரும் பிறந்த 2 வாரங்களிலேயே நண்பர்களாக மாறி விட்டனர். சிறுத்தைப் புலிகள் இயற்கையிலேயே வெட்க உணர்வு கொண்டவையாக இருக்கும். நாயுடன் அவை இருக்கும்போது தன்னம்பிக்கை அதிகம் இருப்பதாக சிறுத்தைகள் உணர்கின்றன என்று உயிரியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

'போவி மிகவும் அன்பானது. அதனால் சிறுத்தை நண்டிக்கு நம்பிக்கை ஏற்படுகிறது. இயல்பாகவே சிறுத்தைகள் சற்று வெட்க உணர்வு கொண்டவை. நாயான போவியுடன் இருப்பதை சிறுத்தை நண்டி மகிழ்ச்சியாக உணர்கிறது' என்று உயிரியல் பூங்கா நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
 

.

சிறுத்தையின் டென்ஷனை போக்கும் வகையில் போவி நாய் செயல்படுகிறதாம். இருவரும் அடிக்கடி ஒன்றாக காட்சியளிக்கிறார்கள்; சண்டையும் போட்டுக் கொள்கிறார்கள்.

இதுகுறித்து டர்ட்டில் பேக் உயிரியல் பூங்கா தனது பேஸ்புக் பக்கத்தில், 'வெள்ளரிக்காயை போல நாய் போவி மிகவும் கூலாக இருக்கும். இதனால் சிறுத்தை நண்டி டென்ஷன் அடையத் தேவையில்லை. நண்டி செல்லும் இடமெல்லாம் போவியும் செல்லும். நாயுடன் இருக்கும்போது சிறுத்தை சவுகரியமாக உணர்கிறது' என்று குறிப்பிட்டுள்ளது. 
 

.

சாதுவாக கருதப்படும் நாய்க்கும் சீறும் சிறுத்தைக்கும் இடையிலான இந்த இணைபிரியாத நட்பை நெட்டிசன்கள் கொண்டாடுகின்றனர்.

'அழகான ஜோடி', 'அதிசயமான நண்பர்கள்' என்று சமூக வலைதள பயனர்கள் கமென்ட் செய்துள்ளனர். 

சிறுத்தைகளுடன் நாய்களை சேர்த்து வளர்ப்பதன் மூலம் சிறுத்தையின் குணத்தை மாற்ற முடியும் என்று அட்லஸ் அப்ஸ்க்யூரா தெரிவிக்கிறது. 
 

.

அமெரிக்காவில் சிறுத்தைகளின் டென்ஷன்களை குறைப்பதற்காக அவற்றுடன் நாய்களையும் சேர்த்து பல உயிரியல் பூங்காக்கள் வளர்க்கின்றன. இதற்கு உதாரணமாக கொலம்பஸ் உயிரியல் பூங்கா மற்றும் கடல் உயிரின காட்சியகத்தை கூறலாம். இங்கு எம்மெட் என்ற சிறுத்தை, குலென் என்ற நாயுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறது. 

Click for more trending news


.