This Article is From Dec 11, 2018

பாஜக சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் - சிவசேனா அறிவுரை

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலின்போது பாஜகவும், சிவசேனாவும் தனித்துப் போட்டியிட்டன. தேர்தலுக்கு பின்னர் இரு கட்சிகளும் இணைந்து ஆட்சியமைத்தன.

பாஜக சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் - சிவசேனா  அறிவுரை

சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பாஜகவின் தேர்தல் தோல்வி குறித்து பேட்டியளித்துள்ளார்.

New Delhi:

5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதில் மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் பாஜக ஆட்சியை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளளது.

இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், செய்தி தொடர்பாளருமான சஞ்சய் ராவத் நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், பாஜக தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ளும் நேரம் வந்துவிட்டது. அதைத்தான் இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்று கூறியுள்ளார்.

கொள்கையளவில் பாஜகவும், சிவசேனாவும் ஒத்துப் போனாலும் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் இரு கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டன. தேர்தலுக்கு பின்னர் இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்து வருகின்றன.

5 மாநில தேர்தல் முடிவை பொறுத்தளவில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. தெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சியும், மிசோரமில் எம்.என்.எஃப். கட்சியும் ஆட்சியமைக்க உள்ளன.

.