This Article is From Jul 15, 2020

ஆசிய அபிவிருத்தி வங்கியின் துணைத் தலைவராகிறார் தேர்தல் ஆணையர்!

லாவாசா மனைவிக்கு வருமானத்துறை அந்நிய செலாவணி தொடர்பான தகவல்களை கோரி அறிக்கை அனுப்பி இருந்தது. அதைத் தொடர்ந்து லாவாசாவின் மகன் அபிர் லாவாசா மற்றும் அவர் இயக்குநராக இருக்கும் நிறுவனம் மீது அந்நிய செலாவணி சட்டங்களை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் துணைத் தலைவராகிறார் தேர்தல் ஆணையர்!

பிரதமர் மோடி தொடர்பான புகார் தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து அசோக் லாவாசா பரபரப்பாக பேசப்பட்டார்

New Delhi:

ஆசிய அபிவிருத்தி வங்கியின் துணைத் தலைவராக தேர்தல் ஆணையர் அசோக் லாவாசா நியமிக்கப்பட்டுள்ளதாக பன்முக நிதி நிறுவனம் புதன்கிழமை பிற்பகல் அறிவித்தது.

2018-ம் ஆண்டில், தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட இவர், அடுத்த இரண்டு ஆண்டுகளில் தலைமை  தேர்தல் அதிகாரியாக பதவியுயர்வு பெற இருக்கக்கூடிய நிலையில் தற்போது ஆசிய அபிவிருத்தி வங்கியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

“இந்திய சிவில் சேவையில் நீண்ட கால மற்றும் சிறப்பான அனுபவங்களை கொண்டிருக்கிறார். தற்போது இந்தியத் தேர்தல் ஆணையர்களில் ஒருவராக உள்ளார், முன்னர் பல மூத்த பதவிகளில் பணியாற்றினார். பொது-தனியார் கூட்டாண்மை மற்றும் மாநில மற்றும் கூட்டாட்சி மட்டங்களில் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றில் அவருக்கு விரிவான அனுபவம் உள்ளது, பொதுக் கொள்கை மற்றும் தனியார் துறையின் பங்கு குறித்து ஆழ்ந்த அறிவு உள்ளது.” என ஆசிய அபிவிருத்தி வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகியோருக்கு எதிரான புகார்களை குழு தீர்ப்பளித்ததில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து அசோக் லாவாசா கடந்த ஆண்டு பரவலாக பேசப்பட்டார்.

முன்னதாக “நேர்மையானவர்களை வெளியேற்றும் அல்லது காயப்படுத்தும் தடைகளை உருவாக்கும் சமூகம் அதன் சொந்த அழிவுக்கான பாதையை உருவாக்குகிறது” என லாவாசா தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் எழுதிய ஒரு கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

லாவாசா மனைவிக்கு வருமானத்துறை அந்நிய செலாவணி தொடர்பான தகவல்களை கோரி அறிக்கை அனுப்பி இருந்தது. அதைத் தொடர்ந்து லாவாசாவின் மகன் அபிர் லாவாசா மற்றும் அவர் இயக்குநராக இருக்கும் நிறுவனம் மீது அந்நிய செலாவணி சட்டங்களை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

அசோக் லாவாசா ஆஸ்திரேலியாவிலிருந்து வணிகப் பட்டமும், மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகளில் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

With input from PTI

.