This Article is From Oct 21, 2019

Pakistan-ல் இருக்கும் 4 Terror Camps-ஐ இந்திய ராணுவம் தாக்கியதாக தகவல்- எல்லையில் பதற்றம்!

Indian Army artillery strikes: பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குல் நடத்துமேயானால், இதைப் போன்ற தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Pakistan-ல் இருக்கும் 4 Terror Camps-ஐ இந்திய ராணுவம் தாக்கியதாக தகவல்- எல்லையில் பதற்றம்!

நேற்றிரவு Pakistan ராணுவம் எல்லை தாண்டி இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் தொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

ஹைலைட்ஸ்

  • பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இத்தாகுதல் நடந்துள்ளது
  • பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் செயல்பட்டுள்ளது
  • 4 அல்லது 5 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இத்தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கலாம்
New Delhi:

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) இருக்கும் 4 தீவிரவாத முகாம்களை (Terror Camps) இந்திய ராணுவம் பீரங்கி கொண்டு தாக்கியுள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்த தாக்குதலால் 4 அல்லது 5 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மற்றும் பலருக்குக் காயம் ஏற்பட்டிருக்கும் என்று சொல்லப்படுகிறது. 

நேற்றிரவு பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் தொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் மற்றும் பொது மக்களில் ஒருவர் கொல்லப்பட்டனர். பலருக்கு இந்த சம்பவத்தில் காயம் ஏற்பட்டதாக தகவல்.

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குல் நடத்துமேயானால், இதைப் போன்ற தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்த ஆண்டு தொடக்கத்தில் புல்வாமாவில், பாகிஸ்தானை மையமாக வைத்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பாலகோட்டில் இருக்கும் அந்த அமைப்பின் முகாம்கள் மீது குண்டு போட்டு தாக்குதல் நடத்தியது இந்தியா. அதேபோல 2016 ஆம் ஆண்டு, செப்டம்பரில் இந்திய தரப்பு, எல்லை தாண்டி, பாகிஸ்தானில் இருந்த தீவிரவாத முகாம்கள் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது. 

இன்று நடந்த தாக்குதல், பாலகோட் தாக்குதலோடோ, சர்ஜிக்கல் ஸ்டிரைக்கோடோ ஒப்பிட முடியாது என்று சொல்லும் ராணுவ வட்டாரம், இது இந்திய எல்லைக்குள்ளேயே இருந்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று சொல்கிறது. இதன் மூலம் பாகிஸ்தான் ராணுவத்துக்கு கறாரான எச்சரிக்கையை இந்திய தரப்பு கொடுத்துள்ளது. 

ஜம்மூ காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதில் இருந்து, பாகிஸ்தான் தரப்பு, இந்தியாவுக்குள் தீவிரவாதிகளை அனுப்ப முயன்று வருகிறதாம். இதன் மூலம் ஜம்மூ காஷ்மீரில் நிலையில்லாத தன்மையை உருவாக்க அந்நாடு முயல்கிறது. இந்தியாவின் முன்னெச்சரிக்கையால் பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை இதுவரை ஈடேறவில்லை என்று சொல்லும் ராணுவ தரப்பு, தொடர்ந்து உஷாராக இருக்க வேண்டும் என்றும் சொல்கிறது. 

காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச கவனத்தைக் குவிக்க பாகிஸ்தான் அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. ஆனால், இதுவரை அந்த முயற்சியிலும் பெரிதாக வெற்றி கிடைக்கவில்லை. 

செப்டம்பர் முதல், பாகிஸ்தான் தரப்பு, பஞ்சாப் வழியாக ட்ரோன் விமானங்களை அனுப்பி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த ட்ரோன்கள் மூலம் சுமார் 10 கிலோ எடையிலான பொருட்களை பாகிஸ்தான், இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக அனுப்ப முடியுமாம். செல்போன்கள், வெடி மருந்து, ஆயுதங்கள் உள்ளிட்டவை ட்ரோன்கள் மூலம் இந்தியாவுக்குள் அனுப்பப்பட்டிருக்கலாம். இதுவரை இந்திய தரப்பு, 8 ட்ரோன்களை கண்டறிந்துள்ளது. 

.