தங்கை, வைரமுத்து குறித்து சர்ச்சை கருத்து… #MeToo குறித்து என்ன சொல்கிறார் ஏ.ஆர்.ரகுமான்!

ஏ.ஆர்.ரகுமான், இந்தியாவில் பல்வேறு துறைகளில் பூகம்பத்தை ஏற்படுத்தி வரும் #MeToo பரப்புரை குறித்து ட்விட்டர் மூலம் கருத்து தெரிவித்துள்ளார்.

தங்கை, வைரமுத்து குறித்து சர்ச்சை கருத்து… #MeToo குறித்து என்ன சொல்கிறார் ஏ.ஆர்.ரகுமான்!

பாதிக்கப்பட்டவர்களுக்கும் மென்மேலும் ஆதரவு கூடி வருகிறது, ரகுமான் (கோப்புப் படம்)

ஹைலைட்ஸ்

  • பல பெயர்கள் என்னை அதிர்ச்சியாக்கியது, ரகுமான்
  • வைரமுத்து குறித்து பலர் என்னிடம் தெரிவித்துள்ளனர், ரைஹானா
  • பெண்களுக்கு பாதுகாப்பானதாக நமது துறை மாற வேண்டும், ரகுமான்
New Delhi:

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இந்தியாவில் பல்வேறு துறைகளில் பூகம்பத்தை ஏற்படுத்தி வரும் #MeToo பரப்புரை குறித்து ட்விட்டர் மூலம் கருத்து தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் ரகுமான், ‘#MeToo பரப்புரையை நான் கூர்ந்து கவனித்து வருகிறேன். இந்த விவகாரத்தில் அடிபடும் பெயர்கள் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கின்றது. பாதிக்கப்பட்ட பெயர்களும் சரி, பாதிப்பை ஏற்படுத்தியதாக சொல்லப்படும் பெயர்களும் சரி, எனக்கு இரண்டுமே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. நமது துறை, பெண்களுக்கு மரியாதை தரும் விதத்தில் மாறுவதைப் பார்க்க நான் ஆசைப்படுகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கும் மென்மேலும் ஆதரவு கூடி வருகிறது. 

 

 

செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் எனது குழுவும், நானும் அனைவருக்கும் பாதுகாப்பான சூழலை உருவாக்க முயல்கிறோம். சமூக வலைதளங்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் அனுபவங்களை பகிர அதிக இடம் உள்ளது. அதே நேரத்தில் இந்த விஷயம் தவறாக பயன்படுத்திக் கொள்ளப்படக் கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார். 

Newsbeep

ஏ.ஆர்.ரகுமானின் தங்கை ஏ.ஆர்.ரைஹானா ஊடக நிறுவனங்களுக்கு அளித்த பேட்டியில், ‘வைரமுத்து தவறாக நடந்து கொண்டிருக்கிறார் என்று பல பெண்கள் என்னிடம் தெரிவித்துள்ளனர். அது ஒரு அனைவருக்கும் தெரிந்த ரகசியமாகவே இருந்து வந்தது. அதே நேரத்தில் அவர் என்னிடம் கண்ணியமாகவே நடந்து கொண்டிருக்கிறார்' என்று கூறி பரபரப்பைக் கிளப்பினார். இது குறித்து ரகுமான் எதுவும் தெரிவிக்கவில்லை. 

NDTV-யிடம் நீங்கள் ஏதேனும் தகவல் தெரிவிக்க விரும்பினால், இந்த மின்னஞ்சலை பயன்படுத்துங்கள் worksecure@ndtv.com