This Article is From Sep 09, 2019

ஒடிசாவின் பழங்குடியின கிராமத்திலிருந்து ஒரு பெண் பைலட்

அனுப்ரியா தனியார் விமான நிறுவனத்தில் இணை விமானியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். விரைவில் வெளிநாடு செல்ல வாய்ப்புள்ளது. மல்கன்கிரி போன்ற பின்தங்கிய மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இதுஒரு பெரிய சாதனை. ஏழுவருட கடின உழைப்பிற்உ பிறகு அவருக்கு வெற்றி கிடைத்துள்ளதாக தெரிவித்தார். 

ஒடிசாவின் பழங்குடியின கிராமத்திலிருந்து ஒரு பெண் பைலட்

Anupriya Lakra is all set to join a private airline as a co-pilot.

Malkangiri/Bhubaneswar:

மாவோயிஸ்ட் தாக்குதல் அதிகம் இருக்கும் ஒடிசாவின் மல்கான்கிரி மாவட்டத்திலிருந்து பழங்குடியினப் பெண் ஒருவர் பைலட்டாகி ஊருக்கு பெருமை சேர்த்துள்ளார்.  23 வயதான அனுப்ரியா லக்ராவின் பைலட் ஆக வேண்டும் என்ற கனவு நிஜமாகிவிட்டது. பொறியியல் படிப்பை விட்டு 2012 இல் விமான படிப்பில் சேர்ந்தார்.

பழங்குடியினர் அதிகம் உள்ள மாவட்டத்தைச் சேர்ந்த பெண் இணை விமானியாக பணியாற்றவுள்ளார். ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் அர்ப்பணிப்பு மூலம் அடைந்த அரிய சாதனைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  “அனுப்பிரியா லக்ராவின் வெற்றியை பற்றி அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். அர்ப்பணிப்பு விடா முயற்சி மூலம் அவர் அடைந்த வெற்றி பலருக்கும் எடுத்துக்காட்டாகும்” என்று நவீன் பட்நாய்க் ட்வீட் செய்துள்ளார்.

அனுப்ரியாவின் தந்தை ஒடிசா மாநில காவல்துறையில் பணி புரிகிறார். தாயார் இல்லத்தரசி. அனுப்பிரியா மெட்ரிகுலேஷனை மல்கங்கிரியில் உள்ள ஒரு கான்வெண்டிலும் செமிலிகுடாவில் உள்ள பள்ளியிலிருந்தும் மேல்நிலை படிப்பை முடித்தார். 2012 ஆம் ஆண்டில் அனுப்ரியா புவனேஸ்வரில் உள்ள பைலட் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்தார். 

அனுப்ரியா தனியார் விமான நிறுவனத்தில் இணை விமானியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். விரைவில் வெளிநாடு செல்ல வாய்ப்புள்ளது. மல்கன்கிரி போன்ற பின்தங்கிய மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இதுஒரு பெரிய சாதனை. ஏழுவருட கடின உழைப்பிற்கு பிறகு அவருக்கு வெற்றி கிடைத்துள்ளதாக தெரிவித்தார். 

.