This Article is From Jul 31, 2019

விஜய்யின் 64வது படத்தில் வில்லனாகும் மலையாள பிரபலம்?

மலையாளத் திரையுலகில் குறும்படங்களில் நடித்து சினிமாதுறைக்கு வந்தவர் ஆண்டனி வர்கீஸ்

விஜய்யின் 64வது படத்தில்  வில்லனாகும் மலையாள பிரபலம்?

ஹைலைட்ஸ்

  • மலையாள திரையுலகில் பிசியாக நடித்து வருபவர் வர்கீஸ்
  • விஜய்யின் 64வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்
  • விஜய் நடிக்கும் பிகில் திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகிறது

அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘பிகில்' படத்தை அடுத்து விஜய் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் விஜய்யுடன் யார் யார்ரெல்லாம் நடிக்கவிருக்கிறார்கள் என்கிற தகவல் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது.

வரும் தீபாவளி அன்று விஜய் தற்போது நடித்து வரும் பிகில் திரைப்படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் படத்திற்கு விஜய் தயாராக இருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க மலையாள நடிகர் ஒருவர் ஒப்பந்தமாகி இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ukeg6i7o

மலையாளத் திரையுலகில் குறும்படங்களில் நடித்து சினிமாதுறைக்கு வந்தவர் ஆண்டனி வர்கீஸ். தற்போது இவர் பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் விஜய்யுடன் அடுத்த படத்தில் நடிக்கிறார் என செய்திகள் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து அதிகராப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

.