This Article is From Aug 24, 2020

கட்சி தலைமை குறித்து கடிதம் எழுதியவர்கள் பாஜகவுடன் கூட்டு வைத்துள்ளனர்: ராகுல் குற்றச்சாட்டு!

CWC Meeting: மன்மோகன் சிங்கை தொடர்ந்து பேசிய ஏ.கே.அந்தோனி கூறும்போது, அந்த கடிதத்தை விட, கடிதத்தில் உள்ள உள்ளடக்கங்கள் கொடூரமானது என்று தெரிவித்துள்ளார்.

கட்சி தலைமை குறித்து கடிதம் எழுதியவர்கள் பாஜகவுடன் கூட்டு வைத்துள்ளனர்: ராகுல் குற்றச்சாட்டு!

New Delhi:

கட்சி தலைமை குறித்து அதிருப்தி கடிதம் எழுதியவர்கள் பாஜகவுடன் கூட்டு வைத்திருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார் எனத் தகவல் வந்துள்ளது. 

20க்கும் மேற்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கட்சி தலைமையை விமர்சித்து கடிதம் அளித்ததில் கடும் கோபமடைந்த ராகுல் காந்தி, இன்று நடந்த செயற்குழு கூட்டத்தில் சரமாரி கேள்வி எழுப்பினார். மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் நெருக்கடி நிலையை சந்தித்து வரும் நிலையில், கட்சி தலைவர் சோனியா காந்தி உடல்நலம் சரியில்லாத நிலையில், இப்படி ஒரு நேரத்தில் எதற்காக இதுபோன்ற கடிதம் அளிக்கப்பட்டுள்ளது? இப்படி கடிதம் அளித்தவர்கள் பாஜகவுடன் கூட்டு வைத்துள்ளனர் என அவர் குற்றம்சாட்டியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

தலைமை தொடர்பான காங்கிரஸ் தலைவர்கள் எழுதிய கடிதம் கசிந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பின்னர் சோனியா காந்தி இடைக்கால தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு வெளிவந்தது. 

இதைத்தொடர்ந்து, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சோனியா காந்தி தொடர்ந்து, தலைவராக நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்த கடிதம் எதிர்பாராதது என்று அவர் தெரிவித்துள்ளார். இதுபோல தலைமை பலவீனப்படுத்துவது, காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்துவதாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

மன்மோகன் சிங்கை தொடர்ந்து பேசிய ஏ.கே.அந்தோனி கூறும்போது, அந்த கடிதத்தை விட, கடிதத்தில் உள்ள உள்ளடக்கங்கள் கொடூரமானது என்று தெரிவித்துள்ளார். மேலும், சோனியாவின் தியாகங்கள் குறித்து பேசிய அவர், ராகுல் காந்தி தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ளும்படியும் வலியுறுத்தியுள்ளார். 

தலைமை மீதான "நிச்சயமற்ற தன்மை" மற்றும் கட்சியில் ஏற்பட்டுள்ள சறுக்கல் தொண்டர்களை மனச்சோர்வடையச் செய்து கட்சியை பலவீனப்படுத்தியுள்ளது என்று மூத்த தலைவர்களான கபில் சிபல், சசிதரூர், குலாம் நபி ஆசாத், பிருத்விராஜ் சவான், விவேக் தங்கா மற்றும் ஆனந்த் சர்மா ஆகியோர் கையெழுத்திட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

.