This Article is From Oct 12, 2018

மத்திய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை: சந்திரபாபு நாயுடு தாக்கு

15வது நிதி ஆணையத்தில், தனது அறிக்கையை ஆந்திர பிரதேச முதல்வர் சந்திர பாபு நாயுடு சமர்பித்தார்.

மத்திய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை: சந்திரபாபு நாயுடு தாக்கு

மத்திய அரசு மாநிலத்தை இரண்டாக பிரித்த போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்

Amaravati:

மாநிலத்தை இரண்டாக பிரித்ததன் மூலம் ஆந்திர பிரதேசம் சந்தித்து வரும் சிக்கல்களை, 15வது நிதி ஆணையத்தில் சுட்டி காட்டிய சந்திரபாபு நாயுடு, மத்திய அரசிடம் மாநிலத்தின் வளர்ச்சிக்காக ரூ.1,09,023 கோடியை அளித்து உதவுமாறு கேட்டுள்ளார்.

மத்திய அரசு மாநிலத்தின் வளர்ச்சிக்காக ரூ 2,500 கோடி தருவதாக உறுதி அளித்திருந்தது. ஆனால், ரூ.1500 கோடியை மட்டுமே வளர்ச்சி நிதியாக கொடுத்தது.

மேலும் அவர், 1971ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகையின் அடிப்படையில், வருமான பற்றாக்குறை மற்றும் பயிர் தேசம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு ஆந்திர பிரதேசத்திற்கு சிறப்பு சலுகை வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

.