This Article is From Dec 13, 2018

ரஜினிக்கு அமிதாப் பச்சன், அக்ஷய் குமார், மோகன்லால் உள்ளிட்டோர் வாழ்த்து

அமிதாப் பச்சன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் நண்பர், சக நடிகர், என்றும் ஜொலிக்கும் நட்சத்திரம் என்று கூறியுள்ளார்.

ரஜினிக்கு அமிதாப் பச்சன், அக்ஷய் குமார், மோகன்லால் உள்ளிட்டோர் வாழ்த்து

ரஜினியுடனான புகைப்படத்தை ஷேர் செய்துள்ள அமிதாப் பச்சன்

New Delhi:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அக்ஷய் குமார், மலையாள நடிகர் மோகன்லால் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் தனது 68-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி, திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், விஐபிக்கள் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

நடிகர் அமிதாப் பச்சன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்... சக நடிகர், நண்பர், எப்போது நட்சத்திரமாக ஜொலிப்பவர் ரஜினி'' என்று கூறியுள்ளார். இந்த வாழ்த்தை கூறியதுடன் ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் அமிதாப் பதிவு செய்துள்ளார்.

இதற்கு ரஜினிகாந்த் அளித்துள்ள பதிலில், மதிப்பிற்குரிய அமிதாப்ஜி நீங்கள் எனக்கு இன்ஸ்பிரேஷன். உங்கள் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

 

 

 

 

 

இதேபோன்று, ரஜினிக்கு அக்ஷய் குமார் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ''ரஜினிகாந்துடன் நடிக்க வேண்டும் என்று ஒவ்வொரு இரவும் நான் கனவு கொண்டிருந்தேன். அவர் மிகவும் எளிமையானவர். அவருடன் நடித்ததை எனக்கு கவுரமாக எண்ணிக் கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

மலையாள நடிகர் மோகன் லால் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அன்புள்ள ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள ரஜினிகாந்த் நன்றி மோகன். உங்களை கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.
 

.