This Article is From Dec 27, 2018

''அமெரிக்காவின் போலீஸ் வேலை முடிந்துவிட்டது'' - ஈராக்கில் அதிபர் ட்ரம்ப் பேச்சு!

அமெரிக்கா சிரியாவிலிருந்து வெளியேறி விடும் இனி சர்வதேச போலிஸ் வேலை அமெரிக்காவுக்கு இல்லை என்று கூறியுள்ளார்

''அமெரிக்காவின் போலீஸ் வேலை முடிந்துவிட்டது'' - ஈராக்கில் அதிபர் ட்ரம்ப் பேச்சு!

ஹைலைட்ஸ்

  • Donald Trump sought to defend "America first" policy of Syria pull out
  • A planned meeting with Iraqi Prime Minister Adel Abdel Mahdi was scrapped
  • Mr Trump spoke to a group of about 100 mostly special forces personnel
Al-Asad Air Base , Iraq:

அமெரிக்க அதிபராக பதவியேற்றதிலிருந்து சர்ச்சையான அமெரிக்க ராணுவம் இருக்கும் பகுதிக்கு அமெரிக்க அதிபர் செல்வது இதுவே முதல்முறை. அமெரிக்க அதிபர் ஈராக்கிற்கு மின்னல் வேக பயணம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்கா சிரியாவிலிருந்து வெளியேறி விடும் இனி சர்வதேச போலிஸ் வேலை அமெரிக்காவுக்கு இல்லை என்று கூறியுள்ளார்.

ட்ரம்ப் அல் ஆசாத் விமானதளத்தில் காலை தனது மனைவி மெலெனியாவுடன் இறங்கினார். அதிபர் அங்குள்ள 100 ராணுவ வீரர்களுடன் பேசினார். மேலும் ராணுவ அதிகாரிகளை தனியாகவும் சந்தித்து பேசினார். ஈராக் பிரதமருடனான சந்திப்பு முதலில் முடிவு செய்யப்பட்டாலும் பின்னர் போனில் பேசிவிட்டு மட்டும் சென்றார்.

வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள வீடியோவில் ராணுவ உடையில் கைகுலுக்கி , ஆடோகிராஃப் போட்டு பேசினார். 2001 தீவரவாத தாக்குதலிலிருந்து இந்த போர் படையினர் பாதுகாப்பில் இருக்கிறார்கள். ஆப்கானில் பகுதியாகவும், சிரியாவில் முழுமையாகவும் ராணுவத்தை வெளியேற்ற ட்ரம்ப் உத்தரவிட்டார்.

அந்த கூட்டத்தில் தனது அமெரிக்கா ஃபர்ஸ்ட் கொள்கையை ஆதரித்து பேசினார். நாட்டை பல்நாட்டு வர்த்தகம் மற்றும் முடிவில்லா மோர்களிலிருந்து மீட்க போவதாக ட்ரம்ப் கூறினார். நாம் உலகின் பல நாடுகளில் பரவியிருக்கிரோம். அது ஏற்கத்தக்கது அல்ல. நம் நாடு நமக்கானது என்றார்.

உங்களுக்கு இனி இங்கு அதிக நேரமில்லை. இந்த நேரமே போதுமானது அமெரிக்கா வாருங்கள் என்று கூறி கிளம்பபினார்.

.