This Article is From Mar 10, 2019

திருவிழாவாக நடந்த அம்பானி வீட்டுத் திருமணம்!

ரஜினிகாந்த் இந்தத் திருமணத்தில் பங்கேற்றார். ரஜினியுடன் அவரது இளைய மகளான சவுந்தர்யா கலந்து கொண்டார்.

திருவிழாவாக நடந்த அம்பானி வீட்டுத் திருமணம்!

முகேஷ் அம்பானியின் மகனான ஆகாஷ் அம்பானி – ஷ்லோகா மேக்தா திருமணம் மும்பையில் நேற்று நடைபெற்றது.

Mumbai:

முகேஷ் அம்பானி வீட்டு கல்யாணம் நேற்று வெகு விமர்சையாக நடந்தது. முகேஷ் அம்பானியின் மகனான ஆகாஷ் அம்பானி – ஷ்லோகா மேக்தா திருமணம் மும்பையில் நேற்று நடைபெற்றது.

இந்தத் திருமணத்திற்கு திரையுலக பிரபலங்கள், தொழில் பிரபலங்கள், முக்கியத் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

முக்கியமாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தன் மனைவியுடன் இந்த திருமணத்தில் கலந்து கொண்டார். உலகத் தலைவர்களான இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டோனி பிளைர், ஐ நா சபையின் முன்னாள் செக்கரட்ரி ஜெனரல் பன் கி மூன் ஆகியோரும் பங்கேற்றனர்.

சுந்தர் பிச்சையைத் தவிர டாடா, நாராயணமூர்த்தி என பிசினஸ் ஜாம்பவன்கள் இதில் கலந்து கொண்டனர்.

lr3vujn8

பாலிவுட் உலகின் முக்கிய நடிகர்கள் அனைவரும் இந்தத் திருமணத்தில் பங்கேற்றனர்.

அமிதாப் பச்சன், அமீர்கான், ஷாருக் கான், ரன்பீர் கபூர், அலியா பட், தீபிகா படுகோன், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா உள்ளிட்டவர்கள் இந்தத் திருமணத்தில் பங்கேற்றனர்.

தமிழ்நாட்டிலிருந்து ரஜினிகாந்த் இந்தத் திருமணத்தில் பங்கேற்றார். ரஜினியுடன் அவரது இளைய மகளான சவுந்தர்யா கலந்து கொண்டார். 

c21bap68

ஒரு பெரிய திருவிழா போன்றே இந்தத் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.

.