This Article is From Nov 24, 2018

ஆப்கன் மசூதியில் குண்டுவெடிப்பு : 26 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. மொத்தம் 26 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் அதிகமானோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது

ஆப்கன் மசூதியில் குண்டுவெடிப்பு : 26 பேர் பலி

மசூதியில் பிரார்த்தனைக்காக கூடியவர்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

KABUL:

ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மாகாணத்தில் இஸ்மாயில் கெல் என்ற மாவட்டம் உள்ளது. இன்று வெள்ளிக்கிழமை என்பதால் பிரார்த்தனைக்காக மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடியுள்ளனர்.

அப்போது இங்கு வெடிகுண்டு வெடித்ததில் ஏராளமானோரின் உடல் சிதறியது. இதையடுத்து ராணுவத்தினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களைக் கைப்பற்றினர்.

இதில் மொத்தம் 26 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் அதிகமானோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

3 நாட்கள் முன்பாக காபூரில் வெடிகுண்டுகள் வெடித்தன. இந்த சம்பவத்தில் 55 பேர் உயிரிழந்தனர். 90 பேருக்கு காயம் ஏற்பட்டிருந்தது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.