This Article is From Jan 28, 2019

''பொங்கல் பரிசு வழங்கியதால் அதிமுக வாக்கு வங்கி 20% உயர்ந்துள்ளது''- செல்லூர் ராஜு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது வீண் பழி சுமத்தப்படுவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

''பொங்கல் பரிசு வழங்கியதால் அதிமுக வாக்கு வங்கி 20%  உயர்ந்துள்ளது''- செல்லூர் ராஜு

தேர்தலில் திமுகவால் தனித்துப் போட்டியிட முடியுமா என்று செல்லூர் ராஜு கேள்வியெழுப்பியுள்ளார்.

ஹைலைட்ஸ்

  • தனித்து போட்டியிட திமுக தயாரா என கேள்வி
  • பொங்கல் பரிசால் அதிமுக வாக்கு வங்கி உயர்ந்தது என்கிறார் ராஜு
  • முதல்வர் மீது வீண் பழி சுமத்தப்பட்டதாக குற்றச்சாட்டு

பொங்கல் பரிசாக ரூ. 1,000 பணத்தை வழங்கியதன் மூலம் அதிமுகவின் வாக்கு வங்கி 20 சதவீதம் உயர்ந்திருப்பதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். 

மதுரை மாவட்டம் பெத்தானியாபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதாவது-

வரவிருக்கும் மக்களவை தேர்தலில் தனித்து நிற்பதற்கு அதிமுக தயார். திமுக தலைவர் ஸ்டாலினுக்கு செல்வாக்கு இருக்கிறது என்றால் மக்களவை தேர்தலில் அவரது கட்சி தனித்து நிற்குமா?

இன்றைக்கு பொங்கல் பரிசாக ரூ. 1,000 தொகையை மக்களுக்கு வழங்கியுள்ளோம். இதனால் அதிமுகவின் வாக்கு வங்கி 20 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. 

இந்த நடவடிக்கையால் அதிமுக அரசுக்கு மக்கள் செல்வாக்கு கூடி விட்டது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் முதல்வர் மீது கொலைப்பழி சுமத்தியுள்ளனர். 

இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். 

.