This Article is From Aug 26, 2020

தியேட்டருக்குச் சென்று "Tenet" படம் பார்த்த டாம் க்ரூஸ்! மாஸ்க் அணிந்த போதிலும் அடையாளம் கண்ட ரசிகர்கள்!!

டாம் க்ரூஸை அடையாளங் கண்டுகொண்ட ரசிகர்கள், உற்சாகமாக வரவேற்றனர். டாம் க்ரூஸூம் ரசிகர்களுக்கு கை காண்பித்து உற்சாகப்படுத்தினார். 

தியேட்டருக்குச் சென்று

ரசிர்களுடன் ரசிகராக 'டெனட்' திரைப்படம் பார்த்த டாம் க்ரூஸ்

ஹைலைட்ஸ்

  • கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் டெனட் திரைப்படம் வெளியாகியுள்ளது
  • சுமார் 70 நாடுகளில் டெனட் வெளியாகியுள்ளது
  • அமெரிக்காவில் சில நகரங்களில் அடுத்த மாதம் வெளியாகும்
New Delhi:

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும்  'டெனட்' திரைப்படத்தை, டாம் க்ரூஸ்  தியேட்டருக்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது நடந்த சுவராசியமான சம்பவங்களை தனது சமூகவலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில், பிரம்மாண்ட பொருட்செலவில் வெளிவந்திருக்கும் திரைப்படம் டெனட். இந்தப் படத்தின் டீசர் கொரோனா பாதிப்புக்கு முன்பு வெளியானது. அப்போது இந்த டீசர் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஜூலை17 ஆம் தேதி டெனட் படம் வெளியாவதாக இருந்தது. ரசிர்கள் டெனட் திரைப்படம் பார்ப்பதற்காக பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். 

ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், டெனட் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி செப்டம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. இருப்பினும் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நாடுகளில் மட்டும் முன்கூட்டியே டெனட் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஆகஸ்ட் 26 ஆம் தேதி ஒரு சில தியேட்டர்களில் டெனட் திரைப்படம் ஓடியது.

இந்த நிலையில், லண்டன் வந்திருக்கும் நடிகர் டாம் க்ரூஸ் டெனட் திரைப்படத்தைப் பார்ப்பதற்காக அங்குள்ள ஒரு தியேட்டருக்குச் சென்றார். தியேட்டருக்குச் செல்லும் போது கருப்பு நிற மாஸ்க் அணிந்தபடியே சென்றார். ஆனால், அவரை அடையாளங் கண்டுகொண்ட ரசிகர்கள், உற்சாகமாக வரவேற்றனர். டாம் க்ரூஸூம் ரசிகர்களுக்கு கை காண்பித்து உற்சாகப்படுத்தினார். 

இதனை டாம் க்ரூஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், மாஸ்க் அணிந்து கொண்டு தான் சென்றேன். ஆனால், இது எப்படி நடந்தது என்றே தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். தியேட்டரில் டெனட் படம் பார்த்து முடித்தப் பின், டெனட் எப்படி இருந்தது என்று ரசிகர் ஒருவர் கேட்க, அருமையாக இருந்ததாக டாம் க்ரூஸ் தெரிவித்துள்ளார்.

இன்று  சுமார்70 நாடுகளில் உள்ள சில தியேட்டர்களில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவன் சில நகரங்களில் மட்டும் தற்போது திரையரங்குகள் திறக்கப்படவில்லை. 

.