This Article is From Aug 08, 2019

டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த கார்; அடுத்தடுத்து 6 வாகனங்கள் மோதல்- புதுக்கோட்டையில் நடந்தது என்ன?

விபத்து நடந்த அடுத்த சில நிமிடங்களில் அக்கம் பக்கத்தில் இருந்த பொது மக்கள் காரிலிருந்தவர்களை மீட்டுள்ளனர்

டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த கார்; அடுத்தடுத்து 6 வாகனங்கள் மோதல்- புதுக்கோட்டையில் நடந்தது என்ன?

திருச்சியிலிருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த கார் ஒன்றின் டயர், நார்த்தாமலை அருகே வெடித்துள்ளது.

புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலை அடுத்தடுத்து 6 வாகனங்கள் மோதிக் கொண்ட கோர விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் 6 பேர் இறந்துள்ளதாகவும் 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளார்கள் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் சிலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

திருச்சியிலிருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த கார் ஒன்றின் டயர், நார்த்தாமலை அருகே வெடித்துள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், நெடுஞ்சாலையில் அங்கும் இங்கும் தறிகெட்டு ஓடியுள்ளது. இதனால் எதிரிலும் பின்னாலும் வந்த 6 கார்கள் ஒன்றோடு ஒன்று மோதியுள்ளன. இந்த கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். 

விபத்தில் காயமடைந்த 20-க்கும் மேறபட்டோர் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். விபத்து நடந்த அடுத்த சில நிமிடங்களில் அக்கம் பக்கத்தில் இருந்த பொது மக்கள் காரிலிருந்தவர்களை மீட்டுள்ளனர். போலீஸார் உதவியுடன் அவர்கள், காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். விபத்தில் சில குழந்தைகளும் சிக்கியிருப்பது தெரியவந்துள்ளது. 

முதலில் வந்த கார், கட்டுப்பாட்டை இழந்ததே அடுத்தடுத்த வந்த கார் விபத்துகளுக்கு வித்திட்டுள்ளது. இந்த கோர விபத்தால் புதுக்கோட்டை - திருச்சி நெடுஞ்சாலையை ஒட்டி சலசலப்பு காணப்படுகிறது. 

.