குவைத்திலிருந்து வெளியேற்றப்படும் 8 லட்சம் இந்தியர்கள்!

குவைத் நாட்டினர் 70 சதவிகிதமும், இதர நாட்டினர் 30 சதவிகிதமும்  இருக்க வேண்டுமென குவைத்தின் பிரதம மந்திரி ஷேக் சபா அல் காலித் அல் சபா சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குவைத்திலிருந்து வெளியேற்றப்படும் 8 லட்சம் இந்தியர்கள்!

குவைத்தின் மொத்த மக்கள் தொகையான 4.3 மில்லியனில் 1.45 மில்லியன் மக்கள் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

ஹைலைட்ஸ்

  • குவைத்தின் மொத்த மக்கள் தொகையான 4.3 மில்லியனில் 1.45 மில்லியன் இந்தியர்
  • குவைத்தின் மொத்த மக்கள் தொகையில் 3 மில்லியன் மக்கள் வெளி நாட்டினராவார்கள்
  • குவைத் நாட்டினர் 70 சதவிகிதமும், இதர நாட்டினர் 30 % இருக்க வேண்டும்
Kuwait:

சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1.14 கோடியாக அதிகரித்திருக்கக்கூடிய நிலையில், குவைத்தின் தேசிய சட்டமன்றத்தின் சட்டமன்றக் குழு 8 லட்சம் இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறக்கூடிய வரைவு வெளிநாட்டு ஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த மசோதாவின்படி, குவைத்தில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கையானது மொத்த மக்கள் தொகையில் 15 சதவிகிதத்தினை தாண்டக்கூடாது என வரையறுத்துள்ளது. இதற்கான ஒரு விரிவான திட்டம் உருவாக்கப்படுகின்றது.

இந்த மசோதாவின்படி அந்நாட்டில் உள்ள 8 லட்சம் இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் சூழல் ஏற்படும். ஏனெனில் இந்திய சமூகம் குவைத்தில் மிகப்பெரிய வெளிநாட்டினர் சமூகமாக உள்ளது. குவைத்தின் மொத்த மக்கள் தொகையான 4.3 மில்லியனில் 1.45 மில்லியன் மக்கள் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  மட்டுமில்லாமல் மொத்த மக்கள் தொகையில் 3 மில்லியன் மக்கள் வெளி நாட்டினராவார்கள்.

இந்நிலையில் இந்த மக்கள் தொகையை குறைத்து, குவைத் நாட்டினர் 70 சதவிகிதமும், இதர நாட்டினர் 30 சதவிகிதமும்  இருக்க வேண்டுமென குவைத்தின் பிரதம மந்திரி ஷேக் சபா அல் காலித் அல் சபா சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)